நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவீர்கள்!

40
இன்றைய ராசிபலன்

நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவீர்கள்!

டிசம்பர் 02 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (02-12-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். நல்ல வரன் அமையும். கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் கை கூடும். மின்சாதனங்களை கவனமாக இயக்க வேண்டும்.

ரிஷபம்: வெற்றிகள் குவியும். மங்கள காரியங்கள் வந்து சேரும். சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சுமங்கலி பெண்களுக்கு உணவளிக்க வேண்டும். திருமணத் தடை விலகும். வயிறு தொடர்பான பிரச்சனை வரலாம். உணவு விசயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசியல்வாதிகள் புகழ் பெறுவார்கள்.

மிதுனம்: பலருக்கும் அறிவுரை சொல்வீர்கள். பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. தோல் தொடர்பான பிரச்சனை இருக்கும்.

கடகம்: ஏராளமான நன்மைகள் உண்டு. அற்புதமான நாள். செல்வ வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சுபகாரியங்கள் கூடி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலன் கிடைக்கும். வாழை மரத்தை நட்டு வைக்க வேண்டும்.

சிம்மம்: எங்கும் எதிலும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். படபடப்பாக இருக்கும். பதற்றம் இருக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க கூடாது. பயணங்களை தவிர்ப்பது நல்லது. நட்புக்களினால் எச்சரிக்கை தேவை. தன லாபம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி: அற்புதமான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தீராத நோய் தீரும். தாயாரது அனுசரணை கிடைக்கும். பிஸினஸில் முன்னேற்றம் இருக்கும். நல்ல நல்ல செய்திகள் தேடி வரும்.

விருச்சிகம்: பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். நல்ல காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். முருகனை வழிபட வேண்டும். வியாபாரத்தில் சாமர்த்தியமான பேச்சால் இன்று சம்பாதிப்பீர்கள்.

தனுசு: நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவீர்கள். வேலை வாங்கி கொடுப்பீர்கள். நல்லதை சிந்திப்பீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நல்ல வியாபாரம் செய்ய வேண்டும் என்று தோன்றும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

மகரம்: எல்லா வகையான வெற்றிகள் குவியும். மன தைரியம் கூடும். பயணங்களினால் வெற்றி உண்டு. பலரது ஆதரவு கிடைக்கும். சொத்து, சுகம் பெருகும். இறைவனின் அனுக்கிரகம் உண்டு. முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்: ஆதாயம் நிறைந்த நாள். மனதில் உள்ள கவலைகள் மறையும் நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். தனப்புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்: மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும் அற்புதமான நாள். நல்ல நல்ல எண்ணங்கள் தோன்றும். வருமானம் உயரும். தான, தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணம் வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.