பூர்வ புண்ணிய தோஷம் நீங்க துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற வேண்டும்!

41
இன்றைய ராசிபலன்

பூர்வ புண்ணிய தோஷம் நீங்க துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற வேண்டும்!

டிசம்பர் 06 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (06-12-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: தன வரவு உண்டாகும். கந்த சஷ்டி கவசம் படிக்க வருமானம் உயரும். நல்ல வேலை வாய்ப்பு தரும். வியாபாரத்தில் நிலையான நிம்மதி உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

ரிஷபம்: தங்கம் வாங்க ஆசை வரும். சுப விசயங்களுக்கு செலவு செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு நன்றாக அமையும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

மிதுனம்: அற்புதமான நாள். அனுகூலமான நாளும் கூட. தாயாரது அன்பு, ஆதரவு கிடைக்கும். வெற்றிகரமான நாள். எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் வரும். நீண்ட நாள் தடைபட்ட காரியங்கள் வெற்றியாகும்.

கடகம்: அலுவலகத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது. பயணங்களை தவிர்ப்பது நல்லது. நல்ல மனிதர் என்ற பெயர் கிடைக்கும்.

சிம்மம்: சந்தோஷமான ஒரு நாள். வெளிநாட்டு யோகம் உண்டாகும். நல்ல வேலை கிடைக்கும். மனக்குறைகள் நீங்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிதாக சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆனந்தமான ஒரு நாள்.

கன்னி: மங்கள காரியங்களுக்காக காத்திருப்பீர்கள். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய கல்யாண காரியங்கள் கூடி வரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பிஸினஸில் முன்னேற்றம் வரும். மனக்குறைகள் விலகும்.

துலாம்: எண்ணிய எண்ணங்கள் வெற்றியாகும். கல்யாண விஷயங்கள் கூடி வரும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். மனதிலுள்ள காயங்கள் மறையும்.

விருச்சிகம்: கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். மனக்கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம் உண்டு.

தனுசு: மன தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல எண்ணங்கள் நிறைவேறும். செயற்கை முறை கருத்தரித்தளுக்கு மருத்துவரை அணுகலாம். பூர்வ புண்ணிய தோஷம் நீங்க துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற வேண்டும். தவறான விசயங்களில் மனம் ஈடுபடக் கூடாது.

மகரம்: எண்ணிய எண்ணங்கள் வெற்றியாகும். நீதி தவறாதவர்களுக்கு நன்மை உண்டாகும். சொத்து, சுகங்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருக்கும்.

கும்பம்: மன நெருக்கடி இருக்கும். எதைப் பற்றியும் கவலை கூடாது. மதுரை மீனாட்சியை வழிபட வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

மீனம்: இறைவனின் அனுக்கிரகம் உண்டாகும். தான, தர்மங்கள் செய்ய வேண்டும்.