2023 ஆம் ஆண்டில் அரசியலில் மாற்றம் ஏற்படும்!

206

2023 ஆம் ஆண்டில் அரசியலில் மாற்றம் ஏற்படும்!

பல சோதனைகளை தாண்டி ஒரு வழியாக இந்த 2021 ஆம் ஆண்டு முடியப் போகிறது. ஒவ்வொருவரும் நிம்மதி பெருமூச்சு விடக் கூடிய 2022 ஆம் ஆண்டு புத்தாண்டும் வரப்போகிறது. பிறக்கப் போகும் 2022 ஆம் ஆண்டு நல்ல வேலை வாய்ப்பை கொடுக்குமா? திருமண வரன் அமையுமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? சொத்து, சுகம் சேருமா? என்பது குறித்து ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்தனியாக பார்ப்போம். ஜோதிஷ கஜகேசரி டாக்டர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன் 12 ராசிகளுக்கான 2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசி பலன்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிறக்கப் போகும் 2022 ஆம் ஆண்டில் முதலில் இந்த 4 கிரக சஞ்சாரத்தை வைத்துக் கொண்டு தான் இந்த ஆண்டின் பலன்களை பார்க்கிறோம். அதில் மிக முக்கியமான கிரகம் எதுவென்றால் ராகு கேது. வரும் ஏப்ரல் 13ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். அதே போன்று கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பயணம் செய்கிறார்.

கால புருஷ தத்துவப்படி லக்னம் 7க்கு உடைய ஸ்தாங்களில் ராகு, கேதுக்கள் அமரப் போவது, 14ஆம் தேதி ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். தனது வீட்டிற்கு சென்று ஆட்சிப் பெற்ற நிலையில் குரு பகவான் அமரப் போகிறார். இதன் மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. 29ஆம் தேதி ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் தேதி ஜூலை 2022 ஆம் ஆண்டு வரையில் சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சி அடைந்து 55 நாட்கள் அங்கிருந்து வக்கிரமடைந்து வக்கிர நிவர்த்தியடைந்து மீண்டும் மகர ராசிக்கு வருவார்.

ஆகையால் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் பத்தாம் இடத்திலிருந்து 11 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஒரு 55 நாட்கள் இருக்கப் போகிறார். இந்த 2022 ஆம் ஆண்டில் இந்த 55 நாட்கள் மட்டுமே மிக மிக முக்கியமான சம்பவம் நடக்கும். நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். பொதுவாக பார்க்கும் போது இந்த ராகு மேஷ ராசியில் இருக்கும் போதும் துலாம் ராசியில் கேது இருக்கும் போதும் தீவிரவாத  தலைவன் கொல்லப்படுவான்.

தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முக்கியமான படைத்தளபதிகளுக்கு அபாயங்கள் அதிகளவில் இருக்கும். தீ விபத்துக்கள் அதிகளவில் நடக்க கூடிய அபாயம் இருக்கும். விவசாயம் கஷ்டப்படும் வாய்ப்புகள் உருவாகும்.

பிரபலமான ஒரு விளையாட்டு வீரரது மரணம் இந்த ஆண்டு நிகழப் போகிறது. கேது 7ஆம் வீட்டில் இருக்கும் போது பொதுவாக இருக்க குடுஇய விஷயங்கள் என்னவென்றால் பொதுமக்கள். அதிகமான பொது நல வழக்குகளை சந்திக்க கூடிய நிலையில், நீதித்துறை இருக்கும். நிதி நிறுவனங்கள் செயல்பட முடியாத அளவிற்கு தடைகள் ஏற்படும்.

அதிகமான விவாகரத்து வழக்குகள் நடைபெறும். மக்கள் சார்ந்த சங்கங்கள், குழுக்கள் இது போன்ற அமைப்புகள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகளவில் நடக்கும். டாஸ்மாக் கடைக்கு தடை வரக் கூடிய அமைப்பும் இருக்கிறது. இனியும் ராகு கேதுக்கள் ஒரு எதிர்மறையான பலன்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

சனி பகவான் மகரத்திலிருந்து கும்பத்திற்கு வரும் போது அந்த 55 நாட்களில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் சுரங்கங்கள் தீ பிடிப்பது, பூகம்பம், நிலநடுக்கம் போன்ற அசம்பாவிதங்கள் அதிகமாக வருவது, அதிகமான மழை, புயல் போன்றவை ஏற்படுவது எல்லாமே நடக்கும்.

முக்கியமான தலைவர்களுக்கு கூட ஆபத்துக்கள் ஏற்படக் கூட நிலை தான் இந்த சனி பகவான் கும்பத்தில் இருக்கும் போது நிகழும். லக்னத்திலிருந்து 11 ஆவது இடத்தில் உட்காரும் போது தலைவர்கள், சங்கங்கள் போன்ற பெரிய மனிதர்களுக்கு ஆபத்து உண்டாக கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மிக முக்கியமாக திரையுலகம் சார்ந்த ஒரு பெண்மணிக்கு ஆபத்து ஏற்படப் போகிறது. அப்படியில்லை என்றால் இறப்பு ஏற்படப் போகிறது என்று சொல்லலாம்.

உப்பு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும். நிலக்கரி சுரங்கத்தில் தீ பிடிக்கும் நிலை ஏற்படும். கஷ்டப்படக்கூடியவர்கள் எல்லோருமே நல்லா வாழக்கூடிய அம்சங்கள் ஏற்படும். புரோடக்‌ஷன் தொடர்பான விஷயங்கள் நன்றாக இருக்கும். இதையெல்லாம் சனி பகவான் கொடுப்பார்.

கால புருஷ தத்துவத்தின்படி 12 ஆம் இடமான மீனத்தில் குரு பகவான் இருக்கும் பொழுது, மங்கள காரியத்திற்கு நிறைய செலவு செய்வது ஏற்படும். ஆன்மீகவாதிகள் சிறந்து விளங்குவது, நாடே ஒரு ஆன்மீக வாதியை போற்றும் நிலை ஏற்படும், வழக்கறிஞர்கள், ஆடிட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மதிப்பு வரும், நிறைய குழந்தைகள் சிஏ படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே செட்டிலாகும் நிலை வரும்.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அனைவரையும் அழைத்து, விஷா கொடுக்கும், பிஆர் கொடுக்கும். இது போன்ற வாய்ப்பு இந்த ஆண்டில் நடக்கும். மிக முக்கியமான ராகு, கேது, சனி மற்றும் குரு ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சஞ்சாரத்தைக் கொண்டு இந்த 2022ஆம் ஆண்டின் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் அது சார்ந்த தொழில்நுட்பங்கள் அதிகளவில் நடைபெறும். ட்ரோன் அதிகளவில் பயன்படுத்தப்படும். உணவு மற்றும் மருந்துகள் டெலிவரி செய்வதற்கு கூட பயன்படுத்தப்படலாம். போக்குவரத்து துறை சேவையில் ஏர்வேஸ் அதிகளவில் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் வரலாம். ஒரு ஒன்றரை ஆண்டில் அது பரிணாம வளர்ச்சி அடைந்து ஏர்வேஸ் மூலமாக அதிகளவில் பயணம் செய்யக் கூடிய அமைப்புகள் உருவாகும்.

விமானங்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் அதிகரிக்கும். நிறைய விமான நிலையங்கள் கூட உருவாக்கப்படலாம். உலகளவில் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி அடையக் கூடிய அமைப்புகள் வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அதிகமாக இருக்கும்.

தெய்வ நம்பிக்கையே எனக்கு இல்லை என்று சொல்லிய அனைவருமே எனக்கு தெய்வம் தான் முக்கியம் என்று சொல்லக் கூடிய ஒரு வாய்ப்பை குரு பகவான் கொடுக்கப் போகிறார். பூஜைகள், ஹோமங்கள், ஜபங்கள் என்று ஆன்மீக சார்ந்தவைகளுக்கு அரசு சார்பிலிருந்து அதிக செலவுகள் செய்யப்படும். 2023 ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு அரசியலில் மாற்றம் ஏற்படக் கூடிய ஒரு அமைப்பு வரும் 2022 ஆம் ஆண்டே தெரியும்.