பாதாளலிங்கத்தின் கருவறையில் தவம் இருந்த ரமண மகரிஷி

0 32

 திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள பாதாளலிங்கத்தில் ரமணமகரிஷி தவம் இருந்தார், அண்ணாமலையார் கருவறைக்கு பின்புறம் இடைக்காடர் ஜீவசமாதி உள்ளது.

தட்சண கைலாசம்:

 மலையின் அடிவாரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், அண்ணாமலையார் ஆலயம் அமைந்துள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் அண்ணாமலையார் கோவிலின் ராஜ கோபுரத்தைக் கட்டினார். விண்ணுயர நிற்கும் ராஜ கோபுரம் கோவிலின் கிழக்கில் அமைந்துள்ளது. அது 216 அடி கொண்டதாக 11 நிலைகளுடன் உள்ளது. இக்கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன. இங்கு சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரு தீர்த்த குளங்கள் உள்ளன. 56 திருச்சுற்றுகளைக் கொண்டது திருவண்ணாமலைத் திருக்கோவில். பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலையை அருணையம்பதி, முக்திபதி, சோணாசலம், அருணாசலம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள். சுமார் 2664 அடி உயரமுள்ள திருவண்ணாமலையை தட்சண கைலாசம் என்று கூறுவதுண்டு. கருவறைத் திருச்சுற்றில் 14 லிங்க மூர்த்தங்களும், 63 நாயன்மார்களும், சிவனடியார்களும், சப்தமாதர்களும் தெய்வ மூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளனர்.

மலையே சிவன்:

 கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் வட்டவடிவமான ஆவுடையார் மீது லிங்க உருவிலே அண்ணாமலையார் எழிலாகக் காட்சி தருகின்றார். அவரை பிரதட்சிணமாக வந்து இடப்புறம் சென்றால் அம்மன் சன்னதியைக் காணலாம். உண்ணாமுலை அம்மனை தரிசித்துவிட்டு அங்குள்ள நவக்கிரகங்களையும் சுற்றி வந்தால் நலன் கோடி விளையும். திருவண்ணாமலைத்தலத்தில் மலையே சிவன். இம்மலையில் உள்ள செடி, கொடி, மரங்கள் யாவுமே மருத்துவப் பயனுள்ள மூலிகைகளாகும். மலையில் பல குகைகள் உள்ளன சிறியதும், பெரியதுமாக உள்ள இந்த குகைகளில் துறவிகளும், முனிவர்களும், சித்தர்களும் தவநிலையில் வீற்றிருப்பதைக் காணமுடியும். ‘திருவண்ணாமலை தீபம்” என்று இந்த விழா சிறப்பித்து கூறப்படுகிறது. இது இறைவனை ஜோதியாக, சுடராக, தீபமாக, விளக்காகப் போற்றித் துதிக்கும் திருவிழா. திருவண்ணாமலையில், கார்த்திகைத் திருநாளன்று பஞ்சமூர்த்திகள் சன்னதிக்கு வெளியில் வந்து நின்றதும், அண்ணாமலையில் அகண்டதீபம் ஏற்றப்படும்.

 இந்தக் கொப்பரையில் பருவத ராஜகுல வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாக கார்த்திகை மாதத்தில் மலைமீது தீபமேற்றுகிறார்கள். இந்தக் கொப்பரையில், கிலோக்கணக்கில் நெய் வார்த்து புதுத் துணியால் திரி செய்து தீபம் ஏற்றுவார்கள்.

தொடர்புக்கு :   9500485233

அமைவிடம் :   

  திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #lordshiva

#ramana maharshi

 Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.