பக்தர்களின் குறை தீர்க்கும் ஸ்ரீ குரு ராகவேந்திரர்

0 124

குரு ஸ்ரீ ராகவேந்திரர்

  ஸ்ரீ ராகவேந்திரர் கோயில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர், தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர், தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் போது அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத் தருவது போன்றவற்றைச் செய்கிறார் குரு, சில சமயம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வை தருகிறார்.

 இதனால் பல பக்தர்கள் ஸ்ரீ ராகவேந்திரர் உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். எல்லோருக்கும் இது வாய்ப்பில்லை, முதலில் அற்புதத்தால் தன்னிடம் ஈர்க்கும் குரு, அடுத்து இவன் தன்னை மிகவும் நேசிக்கிறானா என்பதை சோதித்துப் பார்க்க கஷ்டத்தை தந்து பார்க்கிறார். எந்தளவுக்கு உனது நம்பிக்கை தாக்குப் பிடிக்கும் என்பதை வரையறுக்கும் விதத்தில் அந்த சோதனை இருக்கும்.

  அதில் தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் ஓடிப் போய் விடுவார்கள், சிலர் என்னவானாலும் நீயே கதி என நிலைத்து நிற்பார்கள்,நிலைத்து நிற்பவரின் துயரங்களை தானே வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பரிசாக விடுதலையை அளித்து வாழ்த்துவார் குரு ஸ்ரீ ராகவேந்திரர்.

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா.

 கலைந்த உன் மனதில் நான் இருக்கிறேன் என்று நம்பு எந்த நேரத்திலும் உனக்கு என்ன நிகழ்ந்தாலும் அதை நான் அறிந்து உன்னை காப்பேன், ஏங்கி தவிக்கும் உன்னை என்றும் நான் கைவிடுவது இல்லை, எதையும் தயக்கம் இன்றி செய் உனது செயலில் நான் முக்கியத்துவம் அளிப்பேன்.

 தாழ்வை கண்டு தயங்காதே உனது ஏற்றத்திற்கு நான் பாதுகாப்பு அளிப்பேன், தாழ்ந்து போவது உனது ஏற்றத்திற்கு அறிகுறி அதை உணர்த்து வாழ்வாய் என்னை நம்பு என்றும் நான் உன்னுடன் இருப்பேன்,ராகவேந்திர ஸ்தோத்திரம் யத்பாத கஞ்ரஜஸா பரிபூஷிதாங்கா யத்பாத பத்ம மதுபாயித மானஹாயாயே! யத்பாத பத்ம பரிகீர்த்தன ஜீர்ணபாசஸ்தத்தாஸனம் துரித கானன தாவபூதம்.

 ராகவேந்திரரின் பாதகமலங்களைப் பூஜித்தும், குருராயர்மீது மாறாத பக்திகொண்டும், ஸ்வாமிகளின் ஸ்தோத்திரங்களை மனனம் செய்தும், கீர்த்தனைகள் பாடிக்கொண்டும், நித்தம் அவரே கதியென்று அவரின் மகாத்மியங்களை பிறருக்கு எடுத்துக்கூறியும் பக்தியில் முதிர்ந்திருக்கும் மேன்மையான அந்த பக்தர்களைக் கண்டாலே இப்பிறவி மட்டுமன்றி மறுமையிலும் சுகத்தை அளிக்கும் ராகவேந்திரரின் பக்தர்களைக் காண்பதே சிறப்புடையதாக இருக்கின்ற போது, குருவினது தரிசனம் இன்னுமின்னும் பலப்பல மடங்கு உயர்ந்தது என்பதனை இந்த ஸ்லோகம நமக்குணர்த்துகிறது.

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.