நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

0 457

பிரதோஷ காலத்தில் நந்தியை (Nandhi) வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

1. செல்வங்கள் பெருகும்.

2. கடன் தொல்லைகள் நீங்கும்.

3. நோய்கள் அகலும்.

4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.

5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.

6. வேண்டிய வரம் கிட்டும்.

7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.

8. நீடித்த ஆயுள் கிட்டும்.

9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

 ஒவ்வொரு நாளும் மாலை 4.30 – 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால்அது சனி மஹா பிரதோஷம் எனவும்திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால்அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

பிரதோஷப் பாட்டு :

சிவாய நமஓம் சிவாய நமஹ!

சிவாய நமஓம் நமச்சிவாய!

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர!

ஆடியபாதா அம்பலவாணா!

கூடியே பாடினோம் பிழைபொறுப்பாயே!

அஞ்செழுத்தில் அமர்ந்த சுந்தரேசா!

நெஞ்சில் நிறைந்திருப்பாயே சொக்கேசா!

சுந்தரர்க்கு தோழனான சுந்தரேசா!

சம்பந்தர்க்கு தந்தையானாய் சொக்கேசா!

மண்சுமந்து கூலிகொண்ட சுந்தரேசா!

பெண் சுமந்து பெருமை கொண்டாய்!

தோடுடைய செவியனே சுந்தரேசா!

தூய வெண்ணீரணிந்தவனே சொக்கேசா!

நரியைப் பரியாக்கிய சுந்தரேசா!

நாரைக்கு முத்தி கொடுத்த சொக்கேசா!

மணிவாசகத்தின் ஒளியானாய் சுந்தரேசா!

தேவாரத்தோடு இணைந்திட்ட சொக்கேசா!

சிவசிவ சிவசிவ சபாபதே!

சிவகாமி சுந்தர உமாபதே!

காலகால காசிநாத பாகிமாம்!

விசாலாக்ஷி சகித விஸ்வநாத ரக்ஷமாம்!

ஆலால சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!

கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்!

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!

சிவராஜா சிவராஜா சிவகாமி நாதா சிவராஜா!

என்னப்பன் அல்லவா என்தாயுமல்லவா!

பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத் தேவா!

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!

சிவசக்தி சிவசக்தி சிவசக்தி ஓம்!

நந்தீஸ்வரர் துதி :

கந்தனின் தந்தையைத்தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்!

நந்தனார் வணங்குவதற்கு நடையினில் விலகி நின்றாய்!

அந்தமாய் ஆதியாய் அகிலத்தை காக்க வைத்தாய்!

நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்!

ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்!

பொன்பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்!

சிந்தனை வளம் கொதிப்பை சிகரத்தில் தூக்கி வைப்பாய்!

நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!

மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்!

வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்!

சோலைக்குயில் வண்ணப் பூவைச் சூடும் நந்தி தேவா!

நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!

தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி!

அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி!

குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி!

தஞ்சமாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்!

பிரதோஷ துதிகள்:

நாகத்தான் கயிறாக நளிர்வரையதற்குமத்தாகப்

பாகத்தேவ ரொடகடர் படுகடலின் யெழக் கடைய

வேகநஞ் செழவாங்கே வெருவோடு மிரிந்தெங்குமோட

ஆகந்தண்ணில் வைத்தமிர்தமர்க்குவித்தான் மறைக்காடே!

திருஞானசம்பந்தர்

பருவரை ஒன்று சுற்றி அரவங்கை விட்ட இமையோ ரரிந்து பயமாய்த்

திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடவா னெழுத்து விசைப் போய்ப்

பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை அருளாய் பிரானே எனலும் அருள்

கொடு மாவிடத்தை எரியாமலுண்ட அவனண்ட ரண்டர் அரசே!

திருநாவுக்கரசு நாயனார்

கோல் வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த

ஆல நஞ்சு கண்டவர் மிகவிரிய அமரர்கட்கருள் புரிவது கருதி

நீலமார் கடல் விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த

சிலங் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன் கூருளானோ!

சுந்தரர்

கோலால மாகிக் குரைகடல் வாயென் றெழுந்த

ஆலால முண்டா வைன்சதுர்தா னென்னேடி

ஆலால முண்டிலனேல் அயன்மா லுள்ளிட்ட

மேலாய தேவரெல்லாம் வீடுவகாண் சாழலோ!

மாணிக்கவாசகர்

இனியோ நாமுய்ந்தோம் இறைவன், தாள்சேர்ந்தோம்

இனியோ ரிடரில்லோம் நெஞ்சேஇனியோர்

வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப்பிறவிக்

கனைக்கடல்நீந்தினோம்காண்

காரைக்கால் அம்மையார்

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

 

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.