Browsing Category

ஸ்தலபுராணம்

ஸ்தலபுராணம்

முதலில் தோன்றிய தலபுராணம் உமாபதி சிவம் அவர்கள் பாடிய திருக்கோயிற்புராணம். இது தில்லை எனப்படும் சிதம்பரத்தைப் பற்றியது. அக்காலத்தில் தமிழருக்குத் தலபுராணக் காதல் அதிகமாக இருந்தது. அதனால் ஒருதலத்திற்கே பல புராணங்கள் தோன்றின. சிதம்பரத்திற்கு மூன்று தலபுராணங்கள் உள்ளன. பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற்புராணம், துறைமங்கலம் சிவப்பிரகாசருடைய சகோதர்களாகிய கருணைப்பிரகாசரும் ஞானப்பிரகாசரும் பாடிய சீகாளத்திப்புராணம், திரிகூடராசப்ப கவிராயர் பாடிய திருக்குற்றலத் தலபுராணம், சிவஞானமுனிவரின் காஞ்சிப்புராணம், அவருடைய மாணாக்கராகிய கச்சியப்பமுனிவரின் திருவானைக்காப்புராணம், திருத்தணிகைப்புராணம், திருப்பேரூர்ப்புராணம், அவரைத் தம்முடைய மானசீக குருவாகக் கொண்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய திருநாகைக்காரோணப்புராணம், திருப்பெருந்துறைப் புராணம் என்பனவும் இவை போன்ற வேறு பல தலபுராணங்களும் காப்பியங்களுக்கு நிகரான கவிச்சுவை நிறைந்தன.

பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்.

வடமொழியும் தென்மொழியும் முற்றக் கற்ற புராண ஆசிரியர்கள் மேற்கூறியவற்றைக் கூறுவதோடு சமாதானம் அடையவில்லை. தாங்கள் பலநூல்களில் படித்து அறிந்த பலவற்றையும் தாம் படைக்கும் புராணகாப்பியத்தில் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

தமிழ்த் தலபுராணங்கள் தம் பார்வையைத் தமிழ்நாட்டளவில் குறுக்கிக் கொள்ளாமல் இந்தியத் திருநாடு முழுவதிலும் செலுத்தின. தமிழ் மரபை வேதமரபோடு இணைத்துத் தென்னாட்டுச் சைவத்தின் பார்வையை விரிவடையச் செய்தன.

இந்திரன், பிரமன், திருமால் முதலிய தேவர்களும், பராசரன், வியாதன், காசிபன், மார்க்கண்டன், ததீசி, அகத்தியர், பதஞ்சலி, உபமன்யூ, மிருகண்டு, விசுவாமித்திரர், வசிட்டர் முதலிய இருடிகளும் புராணக்கதைகளில் பாத்திரங்களாகி, தமிழ் மக்களுக்கு நெருக்கமானார்கள்.

ganga2புராணக்கதை மாந்தர்கள் பலர் வடநாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு உள்ள தலத்தில் வழிபட்டு முத்தியடைந்தர்கள். இந்த முறையில் தமிழ் மக்கள் வடநாட்டுடனும் மக்களுடனும் இலக்கியவழி அறிமுகமனார்கள். இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும் தமிழ்த்தல புராணங்களில் உண்டு

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருநறையூர் நாச்சியார் கோவில்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருநறையூர் நாச்சியார் கோவில் திருநறையூர் நம்பி திருக்கோவில் கும்பகோணம் அருகே உள்ள…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி  திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர்…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில் நெல்லை மாவட்டம்…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருவெண்காடு

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருவெண்காடு காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் தல சிறப்பு:  நவகிரகத்தலங்களில் இத்தலம்…

கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்

கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும் வானவனை வலிவலமும் மறைக் காடானை மதிசூடும் பெருமானை…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆண்டளக்கும் ஐயன் – திருஆதனூர்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆண்டளக்கும் ஐயன் - திருஆதனூர் கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில்…