தன்வந்திரி பீடத்தில் கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை

57

கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை

ஜூலை 09 குருபூர்ணிமா முதல் தன்வந்திரி பீடத்தில் கோடான கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை ஆரம்பம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக அமைதி வேண்டியும், உலக நலனுக்காகவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், பொருளாதாரம் உயரவும் வருகிற 09.07.2017 ஞாயிற்றுக் கிழமை முதல் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருள் பெற்று ஆரோக்யதுடன் வாழவும் குரு மஹாங்களின் ஆசிகளுடன் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும் ஸ்ரீ ஆரோக்ய லக்‌ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு கோடி அர்ச்சனையுடன் கோடி தீபம் ஏற்றும் வைபவம் குரு பூர்ணிமா நாள் முதல் தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட வைபவம் கீழ்கண்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது.

துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகவும்,கிரக தோஷம், கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும்தடைகள் விலகவும், திரண்ட செல்வம் ஏற்படவும், அப சகுனம், பெரும் பாவம் விலகவும், குடும்ப ஒற்றுமை, புத்திர சுகம்,கல்வி கேள்விகளில் விருத்தி சர்வ பீடைநிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம்ஆகியவைகளில் மேன்மையடையவும், மூன்று ஜென்ம பாவங்கள்,குல தெய்வகுற்றமும் சாபம், தாம்பத்ய தகராறு, கடன் தொல்லை, சனியின்தாக்கம் திருமணத்தடை விலகவும் ,ஆரோக்கியமும் நிறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி கல்விகேள்வி களில் குழந்தைகள் விருத்திகாணவும். இல்லத்தில் சகல பொருட்களும்நிறைந்து தான்யம்பெருமளவில் கிடைத்து, மனநிம்மதி, புத்திரபாக்கியம் ஏற்படவும்,பசுக்கள்விருத்தியாகவும், பசிப்பிணிகள் நம்மைவிட்டு அகலுவும், ஐஸ்வரியம்,நிலைத்த புகழ், இன்பங்கள் வந்து சேர்ந்து, தர்ம புண்ணியசிந்தனைகள் அதிகரிக்கவும்.

தாம்பத்யம் சிறக்கவும், . சர்வ மங்களம் உண்டாகவும் இந்த கோடி தீப கோடி அர்ச்சனை நடைபெறவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,

வாலாஜாபேட்டை – 632513.

வேலூர் மாவட்டம்.

Ph : 04172-230033 / 230274

Cell : 9443330203, 8124516666

Web: www.danvantritemple.org

eMail : [email protected]

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.