தேவி ஸ்ரீ கரிமாரியம்மன் நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேகம்

0 169

தேவி ஸ்ரீ கரிமாரியம்மன் நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேகம்

அஷ்ட நாகங்கள் புடைசூழ அன்னை தேவிகரியநாகமாரி நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேக அழைப்பிதழ்

 உலகத்துக்கெல்லாம் ஆதிமுதற் சக்தியாய் விளங்கும் அன்னை பராசக்தி நாக லோகத்தவர்கள் செய்த தவப்பயனினால் இக்கலியுகத்தில் கருநாகமாக அவதரித்து. குண்டலினி தத்துவமாய் தீண்டி ஆட்கொண்டு கரியமாரி என்ற திருநாமம் பூண்டு, கரிய நாகங்கள் வசிக்கும்.

kari

 மகா ஆரண்ய க்ஷேத்திரத்தில் நாகத்தின் தலைவனாக விளங்கும் ஆயிரம் நாவுடைய ஆதிசேஷன் மற்றும் சங்கன், குளிகன், கார்கோடகன், அனந்தன், வாசுகி, தக்ஷன், பத்மன், மகாபத்மன் எனும் அஷ்ட நாகங்களான நாக தோவர்களுடன், ராகு, கேது எனப் பாம்பிரண்டும் அனுதினமும் அன்னையவளை வலம் வந்து வணங்கக் கூடிய மிக அடர்ந்த ஆனந்த வனத்தின் நடுவே, ஏழுமலைகள் தம்மை சூழ அன்னை மகாசக்தி கருமாரி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் தம் அடியவராம் தேவி குகயோகி புண்ணியக்கோட்டி மதுரை முத்து சுவாமிகளை நிமித்தமாக வைத்து விண்ணவர் அனைவருக்கும் அருட்காட்சி அளித்த அருட் தலமே திருவடிசூலம் எனும் கரியநாகவன ஷேத்திரமாக்கும்.

Raja Kesiri Simham.jpg

 இத்தலத்தில் நாக தேவர்கள் தம்மையை வலம் வந்து துதிப்பதை அன்னையே எடுத்தியம்பிய வண்ணம் ஆகம சாஸ்திர விதிகளின்படி எட்டு நாகங்களுக்கும் தனித்தனியாக கோயில்கள் வலமாக அமைத்து.

Trishul _ other side

நடுவே எண்கோண வடிவிலான விமானத்துடன் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருக்கோயில் அமைத்து சுவாமிகளுக்கு தியானத்தில் அனைத்தும் நாக சொரூபமாக காட்சியளித்த தாயின் திருமேனியின் திருவுருவை, அருட் பிரதிஷ்டை செய்ய அவள் அருளால் நடைபெறும்.

ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 18ஆம் நாள் (03.09.2017) ஞாயிற்றுக்கிழமை திருவோணம்  நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய நன்நாளில் நேரம்: காலை 10.25 மணிக்குமேல் 11.45 மணிக்குள் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சீரும் சிறப்புமாக நடைபெறும்.

Thiruvilaku Poojai.jpg

ஆதலால் கண்ணுரும் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பேரானந்த பெருவாழ்வு அடைவோமாக.

அஷ்ட நாக பிரதிஷ்டை மகிமைகள்:

 ஜாதகத்தில் ராகு, கேது தோஷம் இதனால் வரும் நீண்டநாள் தள்ளிப்போகும் திருமணத்தடை, தலைமுறை தலைமுறையாக வரும் சர்பதோஷம் அதனால் வரும் பித்ருதோஷம், திருமணபந்தங்களில் சங்கடங்கள், தொடர்ந்து வரும் நோய்கள் இப்படி அல்லலுரும் மானுடர்களூக்கு இங்கு அன்னையே அனைத்தும் நாக சொருபமாகி அவளின் கருநாக வனத்தில் வீற்றிருந்து பரிகாரமாகுகின்றாள்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.