தோஷங்கள் தீர்க்கும் ஆழ்வார் திருநகரி ஆதி நாதபெருமாள்

0 488

 தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் ஆதிநாதவல்லி குகூர்வல்லியுடன் ஆதிநாதர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நவகிரக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை.

 பிராத்தனைகள் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிப்படுகிறார்கள், ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோவிலில் உள்ள புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால், மகாவிஷ்ணு மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம். இத்தலத்தில் நம்மாழ்வார் சன்னிதியும், மூலவர் ஆதிநாதன் சன்னிதியும் தனித்தனியே உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என இரு நாச்சியார்களுக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.

 மூலவர் ஆதிநாத பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மணவாள மாமுனிகள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாக இந்த தலம் விளங்கு கிறது. மூலவரின் முன்புறம் உள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினர். மூலவரின் கருவறை விமானத்தை விட, நம்மாழ்வார் சன்னிதியின் விமானம் பெரியதாகும். அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் ஆதிநாத பெருமாள் என்பதால் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது.

பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர்:

 இந்த கோவிலில் உள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி, அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தல ‘மோகன வீணை’ எனும் ‘கல் நாதஸ்வரம்’ உலக அதிசயமாகும். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை, இத்தல ஆதிநாத பெருமாளுக்கும் உண்டு, இத்தலத்தின் தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழு மலையானும், ஸ்ரீரங்கம் அரங்கனும் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். வடக்கு மாட வீதியில் ஆண்டாளுக்கும், தேசிகனுக்கும் சன்னிதிகள் உள்ளன.

குருகூர்:

 பிரம்மதேவருக்கு குருவாக இருந்து இத்தல ஆதிநாதன் உபதேசம் செய்ததால் இத்தலம் குருகூர் என்றானது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை ஜாதகத்தில் வேண்டுவோர் இத்தல ஆதிநாதரை வழிபட்டால் நலம் உண்டாகும். ராமர், வேணுகோபாலன், நரசிம்மர், கருடன், ராமானுஜர் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன, இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.

அலங்காரப் பிரியனுக்கு கெளஸ்துப மாலை எதற்கு?

அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம். நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபம் சிறப்பு வாய்ந்தது.

சேஷ ஷேத்திரம்:

  இங்குள்ள புளியமரம் ஆதிசேஷனே ஆகும். எனவே இத்தலத்திற்கு ‘சேஷ ஷேத்திரம்’ என்றும் பெயர் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.