தீபாவளி – ஜப்பசி மாத சதுர்த்தசி தினம் நரக சதுர்த்தசி

0 455

தீபாவளி – ஜப்பசி மாத சதுர்த்தசி தினம் நரக சதுர்த்தசி

 ஐப்பசி மாதம் தன்னுள்ளே பல விஷேட தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றுள் பண்டிகையென்ற ரீதியில் கொண்டாடப்படுவது தீபாவளியாகும். இப்பண்டிகை ஐப்பசித் திங்களில் கிருஷ்ணபட்ச சதூர்த்தசியன்றாகும். இதை நரக சதுர்த்தசி.

 தீபாவளிக்கு தீபங்களின் வரிசை என்று பொருள். இதனுடன் தொடர்புடைய புராண கதையொன்று உள்ளது. அதன்படி கிருஷ்ணபரமாத்மாவுக்கும் பூமா தேவிக்கும் பிறந்த நரகாசுரன் இறைவனை நோக்கித் தவஞ்செய்து பல வரங்களைப் பெற்றான்.

28 சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட - நர‌சி‌ம்‌‌ஹ‌ி

 பெற்ற வரத்தில் வலிமையோடு தனது அதிகாரத்தை அழிவு வழியில் செலுத்தி உலகோரைத் துன்புறுத்தினான். வருத்தினான்.

 ஒருவர் தொடர்ந்து கொடுமை செய்து கொண்டிருக்க முடியாது. நரகாசுரனது கொடுமைகளைக் கேட்டறிந்து கொண்ட கிருஷ்ணபரமாத்மா சத்திய பாமாவுடன் சென்று அவனை வதஞ் செய்து உலகோர் துயர் துடைத்தார்.

 அதர்மத்தின் வழி நின்று கொடுமைகள் செய்து கொண்டிருப்பவர் தனது மகனாக இருந்தாலும் கூட அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே எனும் உயர் சிந்தனையை இக்கதை மூலம் நாம் காண்கின்றோம். கிருஷ்ணபரமாத்மா தீயவனை அழித்து அறத்தை நிலைநாட்டி நல்லவர்கள் துயர்போக்கினார்.

depam 22

பரித்ராணாய ஸாதூனாம்

விநாசாயச துஷ்கிருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய

ஸ்ம்பவானி யுகே யுகே

 நரகாசுரன் இறக்கும் தருணத்தில் தனது தவறுகளை உணர்ந்தான் கிருஷ்ணபரமாத்மாவிடம் நான் மரணத்தைத் தழுவும் இந்நாள் ஆண்டு தோறும் மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவனது வேண்டுகோள் ஏற்கப்பட்டு ஆண்டு தோறும் ஜப்பசி மாத சதுர்த்தசி தினம் நரக சதுர்த்தசி என்று அழைக்கப்பட்டு அவன் நினைவில் நிறுத்தப்படுகின்றான்.

 நரகாசுரன் மரணித்த சதூர்தசி தினத்தில் இந்துக்கள் தீபங்கள் ஏற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஒளி ஏற்றுவதன் மூலம் புற இருளைப் போக்குவது போல அக இருளையும் போக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக மனிதரிடையே காணப்படும் அகவிருளாக கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 ஒவ்வொருவருடைய மனத்திலிருந்தும் குறிப்பிட்ட இவ்வழுக்குகள் நீங்கினால் வீட்டிலும் நாட்டிலும் அமைதி சாந்தி சமாதானம் போன்றவை துலக்கமுடன் ஒளிவீசும் எனலாம். இந்துக்களிடம் தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிந்து ஆலய வழிபாடு செய்யும் வழக்கமுண்டு.

 அன்று தேய்க்கும் எண்ணெயில் லக்ஷ்மி கடாட்சமும் நீரில் கங்கையின் புனிதமும் உண்டென்பது நம்பிக்கை.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.