ஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் !!

0 55

                         ஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் !!

 தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா ஏகாதசி எனப்படும். இது பாவநிவர்த்தி கொடுக்கும் இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும் இல்லறம் இனிக்கும் தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம், மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும்.

 அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல, கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல் துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல் சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.

புராணத்தில் ஏகாதசி :
விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார், எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார், யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.

ஏகாதசி விரத முறை :
ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு விரதத்தை தொடங்க வேண்டும, ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம, தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

  ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம், உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர், போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம், ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

 தை மாத ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம், 31.01.2019 வியாழக்கிழமை சர்வ ஏகாதசி இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம், முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி துளசி தீர்த்தம் பருகலாம் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.

ஏகாதசி விரத மகிமை :
சிவபெருமான் ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார் உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும் உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம் இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன எனவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.