ஏழுமலையான் பெயர் விளக்கம் | Elumalaiyan

0 61

    ஏழுமலையான் பெயர் விளக்கம்

“ஆன்மிகம்:”

ஏழுமலை…

தி ருப்பதி வெங்கடாசலபதியை,

‘ஏழு மலையான்’

என்றும் அழைப்பார்கள்…

ஏழு மலையின் மீது வீற்றிருப்பதால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது.

கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.

அவைகள்,

எ ருது மலை,

க ரு மலை,

சை ல மலை,

பா ம்பு மலை,

க ருட மலை,

நா ராயண மலை,

வே ங்கட மலை…

ஆகியவையாகும்.

எட்டு வித மலர்கள் :

இ றைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன.

அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அவைகள்,

செ ண்பக மலர்,

ந ந்தியாவட்டை,

பா திரி மலர்,

நீ லோற்பவம்,

வெ ள்ளெருக்கு மலர்,

பு ன்னை மலர்,

செ ந்தாமரை,

அ லரி…

ஆகியவையாகும்.

ஒன்பது வகை துளசி :

பெ ருமாளுக்கு உகந்த அர்ச்சனைப் பொருட்களில் ஒன்று துளசி.

பெருமாள் ஆலயங்களில் துளசியை தீர்த்தமாகத் தருவார்கள்.

அது உடலுக்கு அருமருந்தாக அமைந்தது.

துளசியில் ஒன்பது வகையான துளசிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவற்றை இங்கே பார்க்கலாம்.

க ருந்துளசி,

க ற்பூரத் துளசி,

கா ட்டுத் துளசி,

க ரிய மால் துளசி,

செ ந்துளசி,

நா மத் துளசி,

பெ ருந்துளசி,

சி வ துளசி,

நீ லத் துளசி…

ஆகியவையாகும்.

ஒன்பது தீர்த்தங்கள் :

ந ம் நாட்டில் ஒன்பது வகையான புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அவைகள்,

க ங்கை,

ய முனை,

ச ரஸ்வதி,

கோ தாவரி,

ந ர்மதா,

கா விரி,

கு மரி,

பா லாறு,

ச ரயு…

ஆகியவையாகும்.

இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஒருவரின் முன்ஜென்ம பாவங்கள் மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் மட்டுமல்லாது, அவரது பல தலைமுறை சந்ததியினரின் பாவங்களும் கூட கரைந்து போகும்..!

ௐ நமோ நாராயணாய…

ௐ நமோ வேங்கடேசாய…

ௐ நமோ நம..!!

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.