ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள் அன்னையின் நாமங்கள்

0 201

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள் அன்னையின் நாமங்கள்

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்களைப் பற்றிப் பேசும் அன்னையின் நாமங்களைப் பற்றிய தொகுப்பு ஏறக்குறைய பதினாறு நாமங்கள் பூக்களின் தொடர்பு பற்றி இருக்கின்றன. இவற்றில் ஐந்து நாமங்கள் தாமரை மலரினைப் பற்றி பேசுகின்றன. பன்னிரண்டு வகையான மலர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது. சைதன்யம் என்னும் பேரறிவு பூவிற்கு உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது.

lalitha

 சம்பகாசோ(h)க-புன்னாக ஸௌகந்தி கலஸத்கசா (13) செம்பகம் அசோகு புன்னாக சௌகந்திக இவைகளினால் சோபிக்கின்ற கூந்தலை உடையவள்
 நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா (19) புதிதாக மலர்ந்திருக்கும் சம்பக பூவினை ஒத்த மூக்கினால் அதிகமான சோபையை உடையவள்.
கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா(21) கதம்பத்தின் துளிர்களை தன காதுகளில் தரித்திருக்கும் மநோஹரமான ரூபத்தை உடையவள்
* மஹாபத்மாடவீஸம்ஸ்தா (59)* பெரிய தாமரைப் பூக்களுடைய காட்டில் இருப்பவள்
ஸஹஸ்ராராம்புஜாரூடா (105) ஆயிரம் இதழ் தாமரை மேல் அருள்பவள்
பத்மநயநா (247) தாமரைப் பூ போன்ற கண்களையுடையவள்
பத்மாஸநா (278) தாமரைப் பூ ஆசனத்தை உடையவள்

 ராஜீவலோசநா (308) ராஜீவம் என்ற பதத்திற்கு மான் மீன் தாமரை என்ற அர்த்தங்களுண்டு. இவைகளைப் போன்ற கண்களை உடையவள் என்று பொருள் ராஜீவ பதத்திற்கு ராஜாவை அண்டியிருப்பவள் என்ற அர்த்தமும் உண்டு. தன் புருஷனான ராஜராஜேஸ்வரரை (மஹா கமேஸ்வரரை ) அணிடியிருக்கும் பக்தர்களை அனுகூலகமகப் பார்ப்பவள் என்றும் பொருள்

கதம்ப குஸுமப்ரியா (323) கதம்ப மலர்களில் ப்ரியமிருப்பவள்
* சாம்பேய குஸுமப்ரியா (435)* சம்பகப் பூவில் ப்ரியமுடையவள்
தாடிமீ குஸுமப்ரபா (560) மாதுளம்பூவின் காந்தியினைப் போன்ற காந்தியினை உடையவள்
ஜபாபுஷ்ப நிபாக்ருதி(766) செம்பருத்திப் பூவிற்கு இணையான நிறத்தினை உடைய மேனியை உடையவள்
பாடலீகுஸுமப்ரியா(773) பாதிரிப் பூக்களில் பிரியமுடையவள்
* மந்தார குஸுமப்ரியா (776)* மந்தாரப் பூக்களில் பிரியமுடையவள் மந்தாரம் என்பது தேவ லோகத்தின் ஐந்து மரங்களில் ஒன்று
சைதந்ய குஸுமப்ரியா(919) (சித்) சைதன்யமாகிற புஷ்பத்தில் பிரியமுடையவள்
* பந்தூக குஸும ப்ரக்யா (964)* பந்தூக புஷ்பத்தின் காந்தி போன்ற காந்தியை உடையவள் பந்தூகம் என்பது வங்க தேசத்தில் பிரசித்தமான ஒரு மரம். அதன் புஷ்பானது அதிக சிவப்பு நிறத்தை உடையது

அம்பாள் சரண த்யானம்

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.