கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்க ஸ்ரீப்ராஹ்மி

0 432

கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்க ஸ்ரீப்ராஹ்மி

 ப்ராஹ்மி (சரஸ்வதி) ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்க, இந்த அன்னையின் அருள் நிச்சயம் தேவை.

 சிவபெருமான் அந்தாகாசுரன் உள்ளிட்ட அசுரக் கூட்டத்தை அழித்திட பிரம்ம தேவன் முதலான ஆண் தெய்வங்களின் சக்திகள் (மனைவியர்) சப்தமாதர்கள் என்றும் பெண் தெய்வங்களாகி உதவினர். இத்தேவதைகளே சப்தமாதர்கள், சப்த கன்னியர், சப்த மங்கையர் என வழிபடப்படுகின்றனர்.

 மிகப்பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டிய முதல் பிரகாரத்தில் தென்புறமுள்ள தென்முகக் கடவுளான தெட்சிணா மூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த மங்கையர் இருக்கக் காணலாம். வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் ஏழு தேவியரும் காட்சி தருவார்கள். சில இடங்களில் தனித்தனி சிற்பமாகவும், சில கோவில்களில் நீண்ட செவ்வகக்கல்லில் அடுத்தடுத்தும் இத்தேவியர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

 சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சர்வ சங்கரி மாதங்கி சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவம்

ஸ்ரீ பிராம்மி (பிராம்மணி)

 சப்தமாதர்கள் கூட்டத்தில் முதலாவதாக உள்ள தேவி பிராம்மி எனப்படுகிறாள். படைப்புக் கடவுளான பிரம்மாவின் அம்ச மாணவள். எனவே பிரம்மனை போன்று நான்கு முகங்கள், நான்கு கைகள், எட்டு கண்கள் உடையவள். நான்கு கரங்களில் ஒன்று அபயஹஸ்தமாகவும், மற்றொன்று வரத ஹஸ்தமாகவும் உள்ளன.
பின்னிரு கைகளில் ஐப மாலையும், கிண்டியும் பிரம்மனுக்கு உள்ளது போன்றே உள்ளன. ஐடா மகுடத்துடன் பீதாம்பரம் உடுத்தி அன்ன வாகனத்தில் எழுந்தருளுவாள். உயிர்களைப் படைக்கும் சக்தியும் படைத்தவள். குழந்தை வரம் அருளுபவள். சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோவிலின் மூலவர் பிராம்மி தேவியேயாவாள்.
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷ மாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள்.
ருத்திராக்க மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோல் அணிந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால், ஞாபக மறதி நீங்கிவிடும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.