அம்பாளும், பௌர்ணமி விசேஷமும்-‘சாரு சந்த்ர கலாதரா’

0 166

அம்பாளும், பௌர்ணமி விசேஷமும்- சந்த்ர கலாதரா

‘மஹாத்ரிபுரஸுந்தரி’, ‘சந்த்ர மண்டல மத்யகா’, ‘சாரு சந்த்ர கலாதரா’

 அம்பாளுக்குப் பல ரூப பேதங்கள் இருப்பதில் இது ‘ஸுந்தரி’ என்பவளைப் பற்றியது. அவள் தசமஹா வித்யா என்று பத்தில் ஸுந்தரி வித்யாவுக்கு தேவதையாக இருப்பவள். ‘ஸ்ரீவித்யா’ என்பது அதைத்தான்.

gopuram shiva nama

த்ரிபுரஸுந்தரி என்பது அந்த ஸுந்தரிதான். மூன்று லோகத்திலேயும் சிறந்த அழகி த்ரிபுரஸுந்தரி. ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரணம் என்ற முப்புரங்களுக்குள்ளே ஞானமாகவும் காருண்யமாகவும் இருக்கும் ப்ரஹ்ம தத்வம்தான் இப்படி அழகு ஸ்வரூபமான தாயாக ஆகி த்ரிபுர ஸுந்தரி என்ற பெயரில் விளங்குவது. ‘லலிதாம்பாள்’ என்று சொல்வது அவளைத் தான்.

சந்த்ரமௌலீச்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீசக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது த்ரிபுரஸுந்தரிக்குத்தான். ஏனென்றால் அவர் மாதிரியே அவளுக்கும் பூர்ண சந்த்ர ஸம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரஸில் பூர்ண சந்த்ரன் இருக்கிறதென்றால் இவள் வாஸம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில்தான்!

“சந்த்ர மண்டல மத்யகா” என்று ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. அவளுக்கு விசேஷமான திதியும் பூர்ணிமை! ஸாதனாந்தத்தில் (ஸாதனை முடிவில்) அவளே நம்முடைய சிரஸ் உச்சியில் பூர்ண சந்த்ரனாக அம்ருதத்தைக் கொட்டுவாள்.

திவ்ய தம்பதி ஜிலுஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர ஸம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும் த்ரிபுரஸுந்தரியாகவும் இருக்கிறார்கள்.

அவள் சிரஸிலும் சந்த்ர கலை உண்டு.“சாரு சந்த்ர கலாதரா” என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது.

சந்திர மண்டல மத்யகா”

பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் மணித்வீபம், ஸ்ரீபுரம் உள்பட சில வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது.

பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.

பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது (சந்த்ரமா மனஸோ ஜாத:). இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள்.

அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.

‘மஹாத்ரிபுரஸுந்தரி’, ‘சந்த்ர மண்டல மத்யகா’, ‘சாரு சந்த்ர கலாதரா’ என்ற நாமாக்கள் கிட்டக் கிட்டவே வந்துவிடுகின்றன.

பெரியவா சரணம்!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.