ராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்

0 635

ராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்

  திருமோகூர் திருத்தலம் 108 திவ்ய தேசங்களுள் 46-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இங்கே காளமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் நமக்குக் காட்சி தருகிறார். பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்திற்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது.

திருத்தலக்குறிப்பு:

மூலவர் : திருமோகூர் காளமேகப் பெருமாள்
தாயார் : மோகனவல்லித் தாயார்.
சன்னதிகள்: காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், ஆண்டாள், கருடாழ்வார், கிருஷ்ணன், ஆழ்வார்கள், ஹனுமார், நரசிம்ஹர், சக்கரத்தாழ்வார்.

காளமேகப்பெருமாள் கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியவை வெண் கற்களால் செய்து 00123அணிவிக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு சாளகிராம மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. சாளகிராமம் என்பது இமய மலையில் கிடைக்கும் ஒரு புனிதமான கல். இதனை,மகாவிஷ்ணுவின்,வடிவமாகவே பூஜிக்கின்றனர்சாளகிராமத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது சிறந்த புண்ணிய பலன்களைத் தரும்.

  அளவற்ற சக்தி வாய்ந்த சுதர்சன சக்கரம் இக்கோயிலில் உள்ளது. ஒருபுறம் ஸ்ரீ யோக நரசிம்மர், மறுபுறம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். இக்கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இங்கே சக்கரத்தாழ்வார், 16 கைகளுடனும், 16 வகையான ஆயுதங்களுடனும் காட்சி தருகிறார்.

  நரசிம்மர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வார் சன்னதியில், ஒரு கல்லில் சக்கரத்தாழ்வாரை சுற்றி 154 எழுத்துக்களும், 48 கடவுள்கள் உருவங்கள், 6 வட்டங்களுள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாரின் பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 இந்தத் திருத்தலம் நவக்ரஹ தோஷங்களை போக்கக் கூடிய ஸ்தலம். இதற்கு ஸ்ரீ மோகன க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. திருமோகூர் ராகு கேது ஸ்தலமாகும். ராகு கேதுவினால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

கோயில் அமைவிடம்:

012

 மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம்.

 மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், யானைமலை ஒத்தைக்கடை என்னும் ஊரில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது இந்த திருமோகூர் திருத்தலம்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.