கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் பிள்ளையார்பட்டி

0 545

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் பிள்ளையார்பட்டி

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பிள்ளையார்பட்டி

தலச்சிறப்பு :

6 அடி உயர கம்பீரமாக அமர்ந்த கோலத்தின் மூர்த்திதான் – பிள்ளையார்பட்டி விநாயகர் (தொன்மையானவர்). இது ஒரு குடவரைக் கோவில். வலம்புரிவிநாயகர் – சதுர்த்தி விரதம் மேற்க்கொண்டு நிறைவேற்றினால் நலம் பெறலாம். பிரதி ஜனவரி முதல் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரை தரிசிப்பது வழக்கம். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான். ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மஹா கொழுக்கட்டை செய்யப்படுகிறது.

magicsquare-vinayagar

தலவரலாறு :

பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் மருதம்பூர். இங்கு மூலவராக கற்பக விநாயகர் அருள் தருகிறார். இக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கபட்டு உள்ளது. குடைவரைக் கோவிலில் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுக்கு முன்பே பாண்டியர்களால் அமைக்கபட்ட கோவில் கி.பி. 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டவர் வசமானது. இன்று வரை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் கோவில் வழிபாடு நடந்து வருகிறது.

 கயமுகா சூரனை கொன்ற பிள்ளையார் தனது பழியை போக்கிக் கொள்ள சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் பிள்ளையார் பட்டியாகும். இங்கு சிவபெருமானை நோக்கி தவம் செய்த வண்ணம், வடக்கு முகமாகவே பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலிக்கிறார். கற்பக விநாயகர் தனது வலது கையில் ஒரு சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள கச்சையின் மீதும் வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கிறார்.

uchi_vinayagar

 இவரது தும்பிக்கை வழஞ்சுழியாக இருக்கிறது. மற்றொரு சிறப்பு அம்சம் இவருக்கு முப்பரிநூல் கிடையாது. விநாயகர் சன்னதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள வடக்கு கோபுரவாசல் வழியாக சென்று வழிபட்ட பின்பு கிழக்கு கோபுரவாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. விநாயகர் கோபுரத்துக்கு எதிர்புறத்தில் வெளிபிரகாரத்தின் வட திசையில் விசாலமான திருக்குளம் உள்ளது. ஒவ்வொரு சதுர்த்தியின் இரவு நேரத்தில் விநாயகர் மூசிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.

 பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் தேர்திருவிழா புகழ் பெற்றது. இங்கு பிள்ளையாருக்கு தனியே தேர் உள்ளது. பிள்ளையார் தேரில் இரு வடங்களில் ஒன்றை ஆண்களும், மற்றொன்றை பெண்களும் இழுத்துச் செல்வார்கள்.

vinayaga

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. தைபூச தினத்தில் மட்டும் காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் :

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடி ஏற்றம் செய்து திருநாள் தொடங்கும். சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேஷம். மிக விமர்சையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

For Details and news updates contact:
 Send Your Feedback at : [email protected]
Mobile: 9941510000
To Receive Our Daily Devotional News Update on Whatsapp message with Your name to 8124516666
Like us our Facebook page swasthiktv.com
Subscribe in Youtube: https://www.youtube.com/channel/UCGcuIrojwgrYpm5cKdf2bhg

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.