கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ராஜகோபால் சுவாமி திருக்கோயில்

0 219

கோபுர தரிசனம் கோடி அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில்

ராஜகோபால் சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான கோயிலாகும். இக்-கோவிலை துவி ஸ்தலம் என்று குறிப்பிடுவர் . மூலஸ்தானத்தில் வேதநாராயணப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். உள்மண்டபத்தில் இவர் வேதவல்லி தாயார், குமுத வல்லி தாயார்களுடன் காட்சியளிக்கிறார்.

peru

 கோயிலின் கோபுரத்தில் அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக் கிறார். இக்கோயில் தமிழக சிற்பக்கலை பாணியுடன், மதுரா கிருஷ்ணர் கோயில் பாணியும் இணைத்து கட்டப்பட்டுள்ளது.

 இங்குள்ள இறைவனுக்கு “பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார்’ என்ற பெயரும் உண்டு. விஷ்ணுப்பிரியன் என்ற அர்ச்சகர் தினமும் இக்கோவிலுக்கு பூஜை செய்துவந்தார். எனவே தமக்கு பின் சுவாமிக்கு பணிவிடை செய்ய ஆண் குழந்தை வேண்டும் என கோபாலனிடம் பிராத்தனை செய்தார் .

 அதன் பின்னர் அவரது மனைவி கலாவதிக்கு பெண் குழந்தையே பிறந்தது. இதனால் கோபமடைந்த விஷ்ணுப் பிரியன், ஆரத்தி தட்டினை சுவாமி மீது வீசினார். இதனால் சுவாமியின் மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டது. அர்ச்சகர் வீட்டில சென்றுபார்த்தபோது அக்குழந்தை ஆண் குழந்தையாக மாறியிருந்தது. அதை கண்டபின் அர்ச்சகன் கோயிலுக்கு சென்று சுவாமியிடம் வருந்தினார். அதனால் தான் “பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார்” என்ற பெயர் இவருக்கு சூட்டபட்டது.

 அழகிய ராஜகோபாலன் சிலையிற்கு பின் ஒரு கதை உள்ளது.ஒரு காலத்தில் இந்திரனுக்கு அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்தனர். ஒருசமயம், அர்ஜுனன் இந்திரலோகம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

 அங்கு சென்றபொது இந்திரன், அர்ஜுனனிடம் கடலுக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டடனத்தில் இருக்கும் அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழிக்க வேண்டும் என்று கூறினான். அப்போது வானத்தில் இருந்து அர்ஜுனனின் காதில் ஒலித்த அசரிரீ, “அந்த அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ கொல்ல முடியும்,” என்றது. உடனே அர்ஜுனன், தோற்று ஓடுவது போல நடித்தான். அச்சமயத்தில் அசுரர்கள் கேலி செய்ய, அர்ஜுனன் தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை எய்து அவர்களைக் கொன்று விட்டான்.

 இந்த வீரச்செயலை பாராட்டிய இந்திரன், அதற்கு கைமாறாக தான் வணங்கிவந்த கோபால சுவாமியின் சிலையை அர்ஜூனனுக்கு வழங்கினான்.சிலநாட்கள் கழித்து, அர்ஜூனனின் கனவில் தோன்றிய கண்ணபிரான், இந்திரனால் உனக்கு வழங்கப்பட்ட என் சிலையை கங்கைநதியில் இடு,” என்றார். அர்ஜுனனும் அப்படியே செய்தான். அப்போது, கங்கையில் நீராட சென்றிருந்த, தென்பாண்டி நாட்டை ஆட்சிசெய்த ஸ்ரீபதி மன்னன் மிதந்து வந்த சிலையை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.