கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஜம்புகேஸ்வரர்

0 352

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு  ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் திருவானைக்காவல்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஜம்புகேஸ்வரர்

தலச்சிறப்பு :

மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து  திருவிளையாடல் நிகழ்த்தினார்.  இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை  கட்டினான்.  அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனாலும், அவனுக்கு போர்  செய்வதில் மனமில்லை.  அவன் சிவனை வேண்டினான்.  சிவன் விபூதிச் சித்தராக வந்து, பிரகாரம்  கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான்.  சிவன் கட்டிய மதில்  “திருநீற்றான் திருமதில்” என்றும், பிரகாரம் “விபூதி பிரகாரம்” என்றும் அழைக்கப்படுகிறது.  விபூதி  சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஜம்புகேஸ்வரர்

தல வரலாறு :

சிவபெருமானின் பஞ்ச பூததலங்களில் இது (நீர்) அப்புஸ்தலமாக விளங்குகிறது.   நீரில் தாயார் லிங்க வடிவம் செய்து வழிபட்டதால், அப்புஸ்தலம் எனப்பெயர் பெற்றது. கருவறையில் எப்பொழுதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும்.  ஜம்பு எனும் வெள்ளை நாவல் மரத்தடியில் இறைவன் இருப்பதால், ஜம்புகேஸ்வரர் என்று அழைக்கபடுகிறார்.

யானையும், சிலந்தியும் இங்குள்ள இறைவனை மிகுந்த பக்தியோடு வழிபட்டனர்.  இறைவன் மேல்  சூரிய உஷ்ணம் பரவாமல் இருக்க சிலந்தியானது இறைவன் மேல் வலை பின்னியது.  இதை  அறியாத யானை தனது தும்பிக்கையால் சிலந்தி வலையை எடுக்க முற்பட்டபோது, கோபம்  கொண்ட சிலந்தி யானையின் தும்பிக்கையின் வாயிலாக நுழைந்து யானையை மரணம் அடையச்செய்தது, பிறகு தானும் இறந்தது. அதனால் இந்த தலத்திற்கு திருஆனைக்கா என்று பெயர் பெற்றது.  அதுவே பின்னாளில் திருவானைக்காவல் என்று பெயர் பெற்றது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஜம்புகேஸ்வரர்

சிலந்தியானது மறுபிறவியில் கோசெங்கட் சோழனாக பிறந்து 78 மாடக் கோயில்களை கட்டினார்.  இங்குள்ள  அம்பிகையான அகிலாண்டேஸ்வரியின் உக்கிரத்தை குறைக்க கோவில் முன்பாக விநாயகரை பிரதிஷ்டை செய்து அம்பிகையின் இரு காதுகளுக்கு ஆபரணமாக பூஜித்த ஸ்ரீசக்கரங்களை ஸ்ரீ ஆதி  சங்கரரை அணிவித்து உள்ளார்.

கோவிலின் கட்டடக்கலை :

இக்கோவில் கோசெங்கட் சோழனால் கட்டப்பட்டது.  இம்மன்னரே  தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார்.  இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஜம்புகேஸ்வரர்

இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது:

1. ஊஞ்சல் மண்டபம்,

2. நூறு கால் மண்டம்,

3. வசந்த மண்டம்,

4. நவராத்திரி மண்டபம்,

5. சோமஸ்கந்தர் மண்டபம் காணத்தக்கவை.

கோவிலின் வழிபாடு நேரம்:

காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி  தல் இரவு 9.00 மணி வரை.  வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும்

விஷேச தினங்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து நடைத்திறந்திருக்கும்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஜம்புகேஸ்வரர்

பூஜை விவரம் :

ஐந்து கால பூஜைகள்:

இங்கு உச்சிகால பூஜை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

திரு விழாக்கள் : 

ஆடி வெள்ளி (ஐந்து வெள்ளிகள்) ஆடித் தெப்பம்,

நவராத்திரி,

தைத்தெப்பம்,

பங்குனி தேர்த்திருவிழா,

பஞ்சப்பிரகார திருவிழா.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.