கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கள்ளழகர் கோவில்

0 529

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் அழகர் மலை

“அழகர் மலை” என்பது மதுரைக்கு வடக்கே 21 கி .மீ தூரத்தில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.

 இது கிழக்கு மேற்காக 18 கி .மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள் , நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன.

 இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை , திருமாலிருஞ் சோலை , வனகிரி , முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.இச் சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது.

 இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் “அழகர் ” என்று போற்றப்படுகிறார் .இவரே வடமொழியில் ” சுந்தர ராஜன் ” என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதாரமாகிய இராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது.

 அழகர் என்பதற்கு அழகுடையவர் , அழகானவர் என்று பொருள் மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத் தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்திக்கும் கூடலகர் என்னும் பெயர் ஏற்பட்டிருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத் தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு.

alagar temple photo (5)

108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை ( நாகப்பட்டினம் ) என்றதிருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல்(மதுரை) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 கள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது .மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி , தலம் , தீர்த்தம் , ஆகியவை பற்றிய வராக புராணம் , பிரம்மாண்டமான புராணம் , வாமன புராணம் , ஆக் நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது . அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது . அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.

 மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. இங்கே சுந்தரராஜ பெருமாளாக எழுந்தருளியுள்ளார் பெருமாள். அழகர் மலையில் சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.

alagar temple photo (7)

 பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் ‘மண்டூகோ பவ’ என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, ‘விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்’ என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.

 அதன்படி வைகைக் கரையில் தவளையாக தவம் பண்ணிக் கொண்டிருந்த முனிவருக்கு, சாப விமோசனம் கொடுக்கவே கள்ளழகராக மதுரைக்கு வந்து வைகையில் எழுந்தருளியதாக கூறுகின்றன புராணங்கள். மீனாட்சி திருக்கல்யாணம் தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார்.

 இதனிடையே, அழகர் வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை. மாண்டூக முனிவருக்கு சாபம் வைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் தனது பக்தரான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.

alagar temple photo (3)

 தேனூர் மண்டபம் சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். தசாவதார காட்சி தேனூர் மண்டபத்திலிருந்து மீண்டும் மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார்.

 இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார். பூப்பல்லக்கு தங்கப்பல்லக்கில் மலையில் இருந்து இறங்கி வந்த அழகர் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்புவார். வழிநெடுக அவருக்கு பக்தர்கள் விடை கொடுத்து அனுப்புவார்கள். அதிகாலையில் அழகர்மலையை சென்றடைவார், தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png9941510000     Related image8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.