கோபுர தரிசனம் கோடி புண்ணியம் லஷ்மி நரசிம்மர் கோயில், ஆவணியாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்

0 293

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் லஷ்மி நரசிம்மர் கோயில், ஆவணியாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்

 ஆரணியிலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில், ஆரணி – வந்தவாசி மார்க்கத்தில் அமைந்துள்ள இத்திருத்தலம் சிறு குன்றின் மேல், குடைவரைக் கோயிலாகக் காணப்படுகிறது.

sri-lakshmi-narasimha-swami- 111

தலபுராணம்:

 இத்தலத்திற்கென்று தனியாக புராணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அறுபது வருடங்களுக்கு ஒரு முறை, சர்வதாரி வருஷத்தில், தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து உற்சவம் நடக்கிறது. இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம்.

 அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்கிறார்கள். அவ்வாறே அறுபது வருடங்களுக்கு ஒரு முறை ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

நாளை வரலட்சுமி விரதம், விரதம் இருப்பது ஏன்

 இரண்டு அடுக்காக திருக்கோயில்கள் அமைந்துள்ளன. முதலில் சுமார் எழுபது படி ஏறியதும், யோக நரசிம்மர் தரிசனம் பெறலாம். பின்னர், மேலும் நூறு படிகள் கடந்தால், ஸ்ரீனிவாச பெருமாளை நின்ற திருக்கோலத்தில் தரிசிக்கலாம். தாயாரின் திவ்யநாமம் அலர்மேல் மங்கை என்பதாகும். தாயாரை மலையடிவாரத்தில் சேவிக்கலாம்.

 இவற்றைத் தவிர, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் சந்நதியும் அமைந்துள்ளது. நான் சென்ற அன்று மலையுச்சியில் இருந்த பெருமாளை தரிசிக்க இயலவில்லை. சனிக்கிழமை மட்டுமே அது திறக்கப்படுவதாகச் சொன்னார்கள். சரியாகத் தெரியவில்லை. பெருமாளின் சந்நதி ஒரு மரக்கதவு கொண்டு சாத்தப்பட்டிருந்தது.

 ஏமாற்றத்துடன் திரும்ப எத்தனிக்கையில், அம்மரக் கதவில் ஒரு சிறு துளை கண்ணில் பட்டது. ஆர்வம் உந்த அதன் வழியே பார்க்கும்போது, முதலில் எம்பெருமானுக்கு அணிவித்த ஆடையின் பட்டைக் கரை மட்டுமே கண்ணில் பட்டது. மேலும் சற்று சிரமப்பட்டுப் பார்க்கையில், நாரணனின் நின்ற திருக்கோலம் முழுதுமே புலப்பட்டது. திருச்சி அகிலாண்டேஸ்வரி கோயில் ஜம்புநாதரை சாளரம் வழியாகக் கண்ணுறும் பேரானந்தம் கிட்டியது இங்கும்.

தலச்சிறப்பு

 தாயாருக்கும், கருடாழ்வாருக்கும் சிங்க முகம் தரித்துச் சேவை செய்வது இந்த ஒரு கோயிலில்தான் என்று கூறுகிறார்கள். இக்கோயிலில் வழிபடுவது பல நன்மைகளைப் பயக்கும் என்பது நம்பிக்கை. திருமண பிராப்தி, புத்திர பாக்கியம், கடன் தொல்லையிலிருந்து விடுபடுதல் போன்ற பலவற்றிற்கும் இங்கு வந்து நரசிம்மருக்கும், கருடாழ்வாருக்கும் நிவேதனம் செய்து வழிபடுதல் வழக்கமாக உள்ளது.  ஒன்பது நரசிம்மர்களைக் கொண்ட தஷிண அகோபிலம் என்றும் இது அறியப்படுகிறது.

விலங்கா நரனா விளங்கா வடிவில்
நலம்பெற இவ்வையம் தோன்றிச் சிறுவன்தன்
சொல்லுக்காய் தூணில் சுடரான பெம்மான்
தலமா வணியா புரம்.

ஓம் நமோ நாராயணா!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.