கோபுர தரிசனம் கோடி புண்ணியம் மாதவப் பெருமாள் திருக்கோயில்

0 209

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் மாதவப் பெருமாள் திருக்கோயில் (திருத்தேவனார்த் தொகை)

போதலர்ந்த பொழில் சோலைப் புறமெங்கும் பொறு திறைகள்
தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணி தென்கரைமேல்
மாதவன் தானுறையுமிடம் வயல் நாங்கை வரிவண்டு
தேதென வென்றிசை பாடும் திருத்தேவனார்த் தொகையே

-திருமங்கையாழ்வார்

கீழச்சாலை மாதவப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம் சீர்காழி – திருவெண்காடு மார்க்கத்தில் மற்றொரு திவ்யதேசமான திருவாலிக்கு அருகில் உள்ளது. வைணவர்களின் 108 திவ்யதேசங்களில் சோழ திருப்பதிகளில் இது 33வது ஆகும்.

ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்க

தலபுராணம்:

துர்வாசர் தானளித்த மாலையை இந்திரன் அவமதித்த காரணத்தால் அவனைச் சபிக்க, அவன் மனம் வருந்தி அச்சாபம் நீங்க நாராயணனை நோக்கித் தவமிருக்க, அப்போது எம்பிரான்த தான் திருப்பாற்கடலைக் கடையும்போது அச்சாபம் நீங்குமென அருளினார். அவ்வாறு பாற்கடலைக் கடையுங்கால் வெளிப்பட்ட திருமகளை இத்தலத்தில் நாரணனும் நாச்சியாரும் மணம் புரிந்து கொண்டார்.
இவ்வரிய காட்சியைக் காண்பதற்கு தேவர்கள் அனைவரும் திரண்டு இங்கு ஒன்று கூடி நின்றமையால் இது திருத்தேவனார்த் தொகை எனப்படலாயிற்று. முலவர் தெய்வநாயகர் என்றும் உற்சவர் மாதவ நாயகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தாயாரின் திவ்ய நாமம் கடல் மகள் நாச்சியார் என்பதாகும்.

தலச்சிறப்பு:

 வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து நாரணன் திருமகளை மணமுடித்த தலம் என்பதால் – விவாஹம் வேண்டிக் காத்திருப்போருக்கு இது ஏற்ற தலம் என்று சொல்லவும் வேண்டுமோ!

 உடலோ மனமோ வெகுவாக பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் ஆகியோர் இத்தலப் பெருமானை வழிபட்டால் தங்கள் குறைகள் நீங்கக் காண்பர். எத்தலம் சென்றும் ஈடேறாத எண்ணம் இத்தலம் வந்தால் ஈடேறும் என்பது நம்பிக்கை.

 வாக்கு பொய்த்துப் போகிறதே என்று வருத்தமுறுபவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவர்கள் மீண்டும் வாக்கு பலிதம் பெறுவர் என்பது ஐதீகம். இங்கு கருடசேவை பிரசித்தம். இங்கு கருட சேவை செய்தால் அவர்கள் சந்ததி சிறப்புற்று விளங்கும் என்பதும் நம்பிக்கை.

இந்திரன்தன் தானுள்ளிட்டே தேவர்தம் மோடுசேர்ந்து
மந்திரங்க ளோதித்திரு மகளவளை நாரணனும்
கரம்பிடித்த காட்சிகண்டான் கண்டுதன் சாபம்நீங்கி
வரமாகப் பெற்றானன்றோ வாழ்வினிலே பெருஞ்சிறப்பை

ஓம் நமோ நாராயண!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.