கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வைகுண்ட நாதர் திருக்கோயில் (வைகுந்த விண்ணகரம்)

0 187

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வைகுண்ட நாதர் திருக்கோயில் (வைகுந்த விண்ணகரம்)

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

– திருமங்கையாழ்வார்

அலங்காரப் பிரியனுக்கு கெளஸ்துப மாலை எதற்கு?

 வைகுந்தம் ஏகும் வரைக்கும் தாங்கவியலாத அடியவர்தம் ஏக்கம் போக்கிட வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை கொள் வேங்கடவன் இம்மணுலகிலேயே வைகுண்டநாதனாகக் காட்சி தந்து அருள் பாலிக்கும் இத்திருத்தலம் வைணவ திவ்ய தேசங்களில் சோழத் திருப்பதிகளில் முப்பத்து ஒன்றாவதான தலமாகும். சீர்காழிக்கு சுமார் 10 கிமீ தொலைவிலுள்ள திருநாங்கூர் என்னும் வரம்பெற்ற திருவூரில் அமைந்துள்ளது.

தலபுராணம்:

 ஸ்ரீ ராமபிரானின் குலத்துதித்த ஸ்வேதகேதுவும் அவன் மனைவி தமயந்தியும் பஞ்சாக்கினியின் நடுவில் கடுந்தவம் இயற்றித் தங்கள் பூதவுடலைத் துறந்த பின்னரும் அவர்கள் விரும்பிய வைகுண்ட நாதன் தரிசனம் அவர்களுக்குக் கிட்டவில்லை.

 அங்கு வந்த நாரத மகரிஷி ஸ்வேதகேது பூவுலகில் நீதி தவறாமல் ராஜ்ஜிய பரிபாலனம் செய்தபோதும் தான தர்மங்கள் செய்யாததன் விளைவு இது எனக் கூறி, காவிரியாற்றங்கரையில் ஐராவதேஸ்வரரை வணங்கி முறையிடுமாறு கூற, அங்ஙனமே அவ்விருவரும் நாரதரோடு உதங்கரும் இணைந்து கொள்ள எம்பெருமான் வைகுந்தக் காட்சி வேண்டி இறைஞ்ச, வைதார்க்கும் தன் அடி தந்து வானுறைய வழிவகுத்த வைகுந்த வாசன் எழுந்தருளி காட்சி தந்த இடமே இத்திருத்தலம்.

perumal-tirupathi1

 ஹிம்சிகன் என்னும் கொடிய அரக்கனை இங்கு வரவழைத்து அவனை இத்தலத்து உத்தரங்க புஷ்கரணி நீரைப் பருகவவைத்து அவன் தீய எண்ணங்கள் அனைத்தையும் போக்கி, அவனை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பி அவன் மிகப் பெரும் அடியவனாகத் திகழுமாறு செய்த தலமும் இதுவேயாகும். எம்பெருமான் இங்கு வைகுண்ட நாதர் என்றும் தாமரைக்கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயாரின் திருப்பெயர் வைகுந்தவல்லி என்பதாகும். இத்தலத்துக்குரிய வடமொழி சுலோகம் கீழே தரப்பட்டுள்ளது:

ஸ்ரீ வைகுண்ட நப: புரே து பகவாந் வைகுண்ட நாமா ஹரி:
தேவீ தஸ்ய ததாஹ்யுதங்க வரதஸ் தீர்த்தம் ஹ்யுதாங்காச்ரயம்
தத்ராநந்த விவர்த்த நாஹ்வயலஸத் தத்வயோமயாநே ஸ்தித:
ஸாக்ஷாந் மந்மத ஸுந்தரஸ் ஸுரகணை: ஆஸீந ரூபோ வஸன்

தலச்சிறப்பு

 விண்ணோரும் காணற்கரிய வைகுந்தக் காட்சியினை நாராயணன் தன் அடியவர்பால் கொண்ட அன்பின் காரணமாக பூவுலகிலேயே அளிக்கும் திருத்தலம் என்பதால், முக்தி தரும் தலமாக இது விளங்குகிறது. வெங்கடேசன் வைகுந்தத்தில் எவ்வாறு அமர்ந்து காட்சியளிக்கிறானோ அதைப்போலவே இங்கும் அமர்ந்து அருள் பாலிக்கிறான் என்பர்.

 எதிரிகளால் தொல்லை, பில்லி சூனிய ஏவல் தொடர்பான பிரச்சினை அனைத்தையும் தீர்க்கும் தலம் இது குழந்தைகளின் நல்ல எதிர்காலம், தீர்க்காயுள் ஆகியவற்றிற்கு இங்கு எழுந்தருளியுள்ள வைகுந்த நாதனை மனமாறத் தொழுதால் நற்பலன் கிட்டும்.

பொய்கொண்டு மனம்போன போக்கினிலே சென்றிடாது
மெய்யுருவா முனைக்காணில் மேலுமென்ன வேண்டுவனோ.
அய்யனேஎன் வைகுந்த நாதனேகாண் அடியேனென்
மெய்யதனை நீயுருக்கி உன்கோயிற் திருவிளக்கு
நெய்யெனவே ஊற்றியதில் நீசுடரா யொளிராயோ!

ஓம் நமோ நாராயணா!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.