கிரகங்களின் பலன்கள் கிரக காரத்துவங்கள்

0 493

கிரகங்களின் பலன்கள் கிரக காரத்துவங்கள்

 கிரகங்கள் தரும் பலன்களை கிரக காரத்துவங்கள் ஒவ்வொரு கிரகமும் தனக்குரிய திசாபுத்தி காலங்களில் மற்றும் கோட்சரங்களின் போதும் நல்ல அல்லது தீய பலன்களை தருவார்கள்.

சூரியன்:

 தந்தை, மகன், வலது கண், அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ், கீர்த்தி, மாநகரம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர், சிவன், அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல், சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம், மண், அணுத் தொழில், அறுவை சிகிச்சை நிபுணர், துப்பறிதல், தந்தையின் தொழில்.

ஆயிரம் அக்னி ஹோத்திரம் செய்த பலனை அடைய

சந்திரன்:

 மனம், ஆழம், அறிவு, தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், கற்பனை, பால், நதி, கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல், துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன் மனைவி, சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம், கவிதை, ஓவியம், நீர் தொடர்பான தொழில், பார்வதி.

நிலைத்த பெருமையும் பெரும் புகழும் நிலைக்க வேண்டுமா

செவ்வாய்:

 சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை, காவல்துறை, இராணுவம், வெட்டுக் காயம், வீரம், பூமி, ரத்தம், பல், முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம், அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, தாதுப் பொருட்கள், பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.

புதன்:

 கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி.

குரு:

 ஜீவன், வேதம், பக்தி, ஞானம், ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர், நீதிபதி, உயர்குலம், ஆசிரியர் கௌரவம், சாந்த குணம், தெற்கு, சதை, தொடை, பூஜை அறை, பசு, அமைச்சர், நிர்வாகி, மூக்கு, கரும்பு, வாழை, சோதிடம், நீதித்துறை, தட்சணாமூர்த்தி.குருபெயர்ச்சி பாதிப்புகள் அகலும் சப்த குருதலம்

சுக்கிரன்:

 மனைவி, சகோதரி, காமம், காதல், பாடகன், நடிகன், வீடு சுகம், வாசனைத் திரவியங்கள், ருப்பை, கன்னம், வட்டித் தொழில், மது பானம், ஆடை ஆபரணங்கள், மலர், வேசி, திருமணம், பிந்து, பணம், இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா, மஹாலட்சுமி, மூத்த சகோதரி, மூத்த மரு மகள்.

சனி:

 மூத்த சகோதரன், சேவகன், கழுதை, எருமை, தொழில்காரகன், தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண உறுப்பு, சேமிப்பு அறை, சாப்பாட்டு அறை, சாலை, வாயு சம்பந்தமான நோய், நிலக்கரி, சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல், தொழிற்சாலையில் எடுபிடி வேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும் வேலை, பழைய பொருள் விற்பனை, துப்புறவுத் தொழில், கால்நடை வளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா, அரசு தூதுவர்.

ராகு:

 வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன்.

கேது:

 சாயா கிரகம், மோட்ச காரகன், கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், தவம், மனவெறுப்பு, கொலை செய்தல்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.