குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணனின் சிறப்பு

0 74

 குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை,இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார், உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன்.குழந்தைக்கு முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு, இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

சித்திரை விஷு , விருச்சிக ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விசேஷம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.guruvayur appan இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.

  இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.
நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

 இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர். குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர்.

 இந்த ஸ்தலம் குரு மற்றும் வாயு பகவனால் உருவாக்கபட்டதால், கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு பகவானை சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது.கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம் .மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள் . இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

 கேசவன்….குருவாயூர் கோயில் யானை இதன் படத்தை நிறைய பேர் வீட்டில் மாட்டி வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன் …ஏன் இந்த யானைக்கு மட்டும் முக்கியத்துவம் என தேடி இதன் கதையை படித்தபோது சிலிர்ப்பாக இருந்தது. மற்ற கோயில் யானைகளை விட கேசவன் வித்தியாசமானது…கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாது..குருவாயூரப்பனை தவிர வேறு எந்த தெய்வ சிலைகளையும் தன் மீது சுமக்காது…வேறு கோயில்களுக்கும் செல்லாது…கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடும்..ரகளை செய்யாது..குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான். ஆலவட்டம்,குடை,செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவான். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.
ஒருமுறை குருவாயூர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல் மூட்டைகளை கொண்டு வந்து தீயை அணைத்தது..1976 ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில் கேசவன் மீது உற்சவ மூர்த்தியை ஏற்றினார்கள் ஆனால் கேசவனால் நடக்க முடியவில்லை.

 உடனே உற்சவரை வேறொரு யானை மீது ஏற்றினர்கள்..அதை பார்த்துக்கொண்டு கண்ணீர் விட்டபடி மாலை வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை மண்ணில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது.

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய நம

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.