அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் நோய்கள்!
உணவே மருந்து என்பது பழமொழி. ஆனால், அதையும் மறந்து நாம் சாப்பிடும் போதும் அதுவே விஷமாகவும் மாறுகிறது. அதாவது, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப உடலில் பல விதமான நோய்கள் உண்டாகிறது. சத்தான உணவு, ஆரோக்கியமான உணவு தான் ஒருவரை நல்ல ஆரோக்கியமாக வாழ வைக்கும். உரிய நேரத்தில் உடலுக்கு தேவையான சத்தான ஆகாரங்களை நாம் கொடுக்கும் போது உடலானது மீண்டும் புத்துணர்வு பெற்று இயங்க தொடங்குகிறது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் நோய்கள் பற்றி இந்தப் பதிவில் நாம் பார்ப்போம்…
என்னென்ன உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன நோய்கள் வரும்:
மாங்காய் – அதிகமாக சாப்பிட்டால் வயிறு கட்டும் சளி வளரும், இடுப்பு வலி வரும். பித்தம் அதிகமாகும்.
தேங்காய் – அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டாலோ அல்லது தனியாக எடுத்துக் கொண்டாலோ சளி, பித்தம், வறட்டு இருமல் போன்றவை உண்டாகும்.
இஞ்சி – அதிகமாக எடுத்துக் கொண்டால் மென் குரலும் இறுக்கமாகும்.
பச்சரிசி – அதிகமாக சேர்த்துக் கொண்டால் சோகை நோய் வரும்.
பழைய சோறு, கஞ்சி – பழைய சோறு நல்ல மருந்து என்றாலும், அதிகமாக எடுத்துக் கொண்டால் வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால் வலி ஏற்படும்.
அச்சுவெல்லம் – அதிகமாக எடுத்துக் கொண்டால் அஜீரணம் ஏற்படும்.
பலகாரம் – பலகாரம் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படுவதோடு வாந்தி, மயக்கமும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
கோதுமை – உடல் சூடு கொண்டவர்கள் கோதுமையை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மீறினால், வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.
முருங்கைக்காய் – முத்தின முருங்கைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயு, சளி உண்டாகும்.
பாதாம் பருப்பு – பாதாம் பருப்பு அதிகமாக எடுத்துக் கொண்டால் வாய் சுவை மாறும். பித்தம் அதிகமாகும். வயிறு எப்போதும் மந்தமாகவே இருக்கும்.
எருமைப் பால் – அதிகமாக குடித்தால் கிட்னியில் கல், அறிவு மங்கும்.
மிளகாய் – மிளகாய் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வெப்பமுண்டாகும், சளி தொல்லை அதிகமாகும். விந்து கெட்டுப்போகும்.
டீ – டீ அதிகம் குடித்தால் உடலில் நடுக்கம் ஏற்படும், கை கால் வீக்கமாகும், காய்ச்சல், பசியின்மை, விந்து அழியும் போன்ற பிரச்சனைகள் வரும்.
காபி – காபி அதிகமாக குடித்து வந்தால் கை நடுக்கம் ஏற்படும், கண் எரிச்சல் இருக்கும்.
மிளகு – மிளகு அதிகமாக உணவில் சேர்த்தால் உடல் சூடாகும்.
எலுமிச்சப் பழம் – எலுமிச்சையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இரத்த சோகை நோய், இதயம் ஆகியவை பாதிக்கப்படும்.
உப்பு – எலும்புருக்கி நோய், உயிர் விந்தை குறைக்கும்.
வெங்காயம் – வெங்காயம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் தலைவலிக்கும். அறிவு மங்கும். சளி தொல்லை அதிகரிக்கும்.
எள்ளு – பித்தம் செரியாமை உண்டாகும்.
வெள்ளை பூண்டு – ரத்த கொதிப்பு வரும்.
குங்குமப் பூ – கருவில் இருக்கும் குழந்தையின் உறுப்பு மாறும், அதாவது கோணலாக மாறும்.
நாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் உணவில் கூட இப்படியெல்லாம் பிரச்சனை வரும். ஆதலால், எதையுமே அளவோடு சமைத்து, அளவோடு சாப்பிட்டு, வளமோடு வாழ்வோம்.