அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்!

555

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்!

ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அந்த வகையில் இன்று இந்தப் பதவில் அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கப் போகிறோம். விட்டமின் பி சத்து நிறைந்தது. இது பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு தேவையான இரத்தம் இந்த அன்னாசி பழத்தில் உள்ளது.

அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதனை வெயிலில் காய வைத்து வற்றல்களாக செய்து தினமும் தூங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பின் தூங்க செல்வதற்கு முன் ஊற வைத்த வற்றல்களை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பித்தம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

பெண்களுக்கு இருக்கு முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு இந்த அன்னாசி பழம் முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. அன்னாசி பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம், தொண்டைப் புண் ஆகியவற்றிற்கு அன்னாசி பழத்தை சாறு எடுத்து அருந்தலாம். அன்னாசி பழ சாறு வாய் கொப்பளித்தால் தொண்டை அழற்கு சரியாகும். தொண்டையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடல் வலியும், காய்ச்சலும் உண்டாகும்.

அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்ற வேதிப்பொருள் உள்ளது. மூட்டு வலி ஏற்படும் போது அதனை கட்டுப்படுத்த உதவுகிறது.

விட்டமின் ஏ சத்து அதிகம் நிரம்பியுள்ளதால், பார்வை குறைபாடு நீங்கவும் அன்னாசி பழம் பயன்படுகிறது. மேலும், பார்வை கோளாறு, மாலைக் கண் நோய் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் அன்னாசி பழம் உதவுகிறது.