அப்பம் ரெசிபி செய்வது எப்படி?

192

அப்பம் ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – முக்கால் கப், துருவிய தேங்காய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும். ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். பிறகு, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்க வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த மாவைக் கரண்டியால் எடுத்து கொஞ்சம் ஊற்றி, ஒருபக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப்போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்க வேண்டும். இறுதியாக அப்பம் தயார்.

குறிப்பு: ஆவணி அவிட்டத்துக்கு இந்த அப்பம் செய்து படைப்பது வழக்கம்.