அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

155

அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். விறகு அடுப்பு வைத்து, அதில், மண் பாத்திரம் கொண்டு சமையல் செய்து சாப்பிட்டு வந்தார்கள். அரிசியை கழுவும் போதும், வடிக்கும் போதும் அந்த தண்ணீரையும் பயன்படுத்தி வந்தனர். எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு நீண்ட காலத்திற்கு உயிர் வாழ்ந்தனர்.

ஆனால், வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையின் நாம், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கேஸ் அடுப்பு, குக்கர் என்று மாறி வருகிறோம். அதில், சமையல் செய்து சாப்பிடுகிறோம். ஏதாவது, பாத்திரத்தில் சமையல் செய்தால் அரிசி வடிக்கும் போது அரிசி தண்ணீர் இருக்கும். ஆனால், குக்கரில் சமையல் செய்து சாப்பிட்டால், வெறும் சத்து இல்லாமல் மறைந்து சக்கையை மட்டுமே நாம் சாப்பிடுவது போன்று தான் வெறும் சாதம் மட்டுமே குக்கரில் இருக்கும்.

உண்மையில் அரிசி தண்ணீரில் ஏராளமான நன்மைகள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அரிசி வடித்த பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். அதோடு சருமத்தில் உள்ள துளைகளும் அடைக்கப்படும். அதற்கு காட்டனை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

சருமத்தின் மேல் பகுதியை நீர்த்தன்மை பெற வைத்து, சரும அணுக்கள் புத்துணர்ச்சி பெற வைத்து அதனைஅ ஆரோக்கியமாக நீர்த்தன்மை மிக்கதாக மென்மையானதாக ஆக்குகிறது. எப்போதும் முகம் சுத்தமாக இருக்க இயற்கையான பேஸ் கிளீன்ஸர் தேவை என்றால் அரிசி தண்ணீர் அதற்கு பயன்படும். சருமத்தின் மீது கிளின்ஸராக பயன்பட்டு சருமத்திலுள்ள தூசுகளை அகற்றி, துளைகளை சுத்தமாக்குகிறது. பஞ்சில் அரிசி நீர் நனைத்து முகத்தை அதைக் கொண்டு துடைத்துக் கொள்ள வேண்டியது தான்.

அரிசி கழுவிய நீரில் வைட்டமின் ஏ, சி, டி, ஈ ஆகியவை நிறைந்துள்ளது. அரிசியை தண்ணீரில் ஊற வைக்கும் போது அதிலிருக்கும் ஸ்டார்ச் ஆனது கூந்தலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. குளிக்கும் போது அரிசி தண்ணீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வந்தால், மன அழுத்தம், பதற்றம் நீங்கும். மேலும், உடல் எப்போதும் புத்துணர்ச்சியாகவே இருக்கும்.

அரிசி கழுவிய தண்ணீரானது அழகை அதிகரிப்பதோடு, அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனென்றால், அரிசி கழுவிய தண்ணீரில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.