அரிசி – பருப்பு பாயசம் செய்வது எப்படி?

59

அரிசி – பருப்பு பாயசம் செய்வது எப்படி?

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதங்களில் வரும் ஒவ்வொரு விசேஷமான நாட்களிலும் விதவிதமான உணவு வகைகளை தயார் செய்து படைப்பார்கள். அம்மனுக்கு உகந்த கூழ், முருகனுக்கு உகந்த பருப்பு பாயசம் என்று செய்து படைப்பார்கள். அந்த வகையில் இந்தப் பதிவில் ஆடி கிருத்திகை நாளில் முருகனுக்கு படைக்கப்படும் பருப்பு பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை:

  1. பச்சரிசி – ஒரு கப்
  2. கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
  3. பாசிப்பருப்பு – 1/4 கப்
  4. துருவிய தேங்காய் – 1/4 கப்
  5. துருவிய வெல்லம் – ஒன்றரை கப்
  6. நெய் – 4 டேபிள் ஸ்பூன்
  7. உடைத்த முந்திரித் துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்
  8. ஏலக்காய்த் தூள் – 1/4 டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் அரிசி, பருப்புகளை வறுத்து ரவை பதத்துக்கு உடைக்க வேண்டும். உடைத்தவற்றை குக்கரில் சேர்த்து 3 கப் நீர்விட்டு வேக  வைக்க வேண்டும். துருவிய வெல்லத்தை வெந்தவற்றுடன் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட வேண்டும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு, தேங்காய்த் துருவலை வறுத்து இதனுடன் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட வேண்டும். மீதியுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து கொதிக்கும் பாயசத்தில் சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட வேண்டும்.

குறிப்பு: ஆடிக்கிருத்திகை அன்று முருகப் பெருமானுக்கு இந்தப் பாயசத்தை செய்து படைப்பார்கள்.