அவல் பகாளாபாத் ரெசிபி செய்வது எப்படி?

145

அவல் பகாளாபாத் ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், கெட்டி அவல், பால் – தலா அரை கப், தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்).

அலங்கரிக்க: கேரட் துருவல், உலர் திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, உடைத்த முந்திரித் துண்டுகள் – தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அவல், பச்சரிசி இரண்டையும் கழுவிக் களைந்து அரை கப் பால், 2 கப் தண்ணீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் உப்பு, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றால் அலங்கரிக்கவும். இறுதியாக அவல் பகாளாபாத் ரெசிபி ரெடி.