ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்: மாங்காய் சாதம் ரெசிபி செய்வது எப்படி?

66

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்: மாங்காய் சாதம் ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை: பச்சரிசி – 2 கப், கிளி மூக்கு மாங்காய் – ஒன்று, தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், குடமிளகாய் – பாதியளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வேர்க்கடலை, உடைத்த முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசியை 4 கப் நீர்விட்டு உதிர் உதிராக வேகவைத்து ஆறவிட வேண்டும். குடமிளகாயை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ள வேண்டும். மாங்காயைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக்கொள்ள வேண்டும்.

வானலியில் எண்ணெய் விட்டு வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து மாங்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய குடமிளகாய் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். பிறகு உதிர் உதிரான சாதத்தைச் சேர்த்துக் கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாற வேண்டும்.

குறிப்பு: ஆடிப்பெருக்கு அன்று இந்த சாதத்தை செய்து படைக்கலாம்.