ஆடி மாதம் ஸ்பெஷல்: கும்மாயம் செய்வது எப்படி?

120

ஆடி மாதம் ஸ்பெஷல்: கும்மாயம் செய்வது எப்படி?

தேவையானவை:

உளுந்து – ஒரு கப், பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – கால் கப், வெல்லம் – ஒன்றரை கப், நெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: உளுந்து, பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு பவுடராக்க வேண்டும். அந்த பவுடரை நீர்விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும் (கெட்டியான மோர் பதம்). அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை நீர்விட்டுக் கரைத்துக் கொதிக்கவிட்டு, ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து இடைவிடாமல் கிளறி, இடையிடையே நெய்யையும்விட்டு எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்க வேண்டும்.

குறிப்பு: ஆடி மாதத்தில் இந்தக் கும்மாயம் செய்வது வழக்கம்.