இஞ்சியை எதோடு எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

674

இஞ்சியை எதோடு எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

பொதுவாக இஞ்சியை செரிமான ஆவதற்கு பயன்படுத்துவார்கள். டீ கடைகளில் இஞ்சி டீ, சமையலுக்கும் பயன்படுத்துவார்கள். சிலரது வீடுகளில் குழந்தைகளுக்கு இஞ்சி சாறு கொடுப்பார்கள். இதெல்லாம் இருக்கட்டும், இஞ்சியை எப்படி எதோடு சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

  1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிறு தொடர்பான நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
  2. இஞ்சியை சுட்டு உப்பில் தேய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
  3. இஞ்சியை துவையல் செய்து சாப்பிட்டு வர உப்புசம் இரைச்சல் தீரும்.
  4. காலை நேரத்தில் இஞ்சி சாறில் உப்பு கலந்து 3 நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்றல், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடம்பும் இளமை பெறும்.
  5. இஞ்சியை துவையல் செய்து, பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை தீரும். களைப்பு, மார்பு வலி தீரும்.
  6. இஞ்சி சாறில் வெல்லம் கலந்து சாப்பிட வாதப் பிரச்சனை சரியாகும்.
  7. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர பித்தம், அஜீரணக் கோளாறு, வாய் துர்நாற்றம் தீரும். அதோடு, உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.