இதென்ன புதுசா இருக்கே! குன்றிமணியின் மருத்துவ பயன்கள்!

159

இதென்ன புதுசா இருக்கே! குன்றிமணியின் மருத்துவ பயன்கள்!

பேரே புதுசா இருக்கு என்று பார்க்கிறீர்களா? இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தெரியும்? நமது முன்னோர்களுக்குத்தான் குன்றிமணியின் (குண்டுமணி) அருமை, பெருமைகள் எல்லாம் தெரியும். நாமும் குன்றிமணியின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.

பழங்காலத்தில் தங்க நகைகளை எடை போடுவதற்கு குன்றிமணியை பயன்படுத்தியுள்ளனர். இரண்டு குன்றிமணிகள் என்பது தற்போது ஒரு கிராம் அளவு. தங்க சங்கிலி, நெக்லஸ், முத்து மாலை போன்றவற்றில் அழகுக்காக கூட குன்றிமணியை பயன்படுத்தியிருப்பார்கள். இவ்வளவு ஏன், விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் களிமண் பிள்ளையார் வாங்கி வழிபடும் பக்தர்கள் விநாயகரின் கண்களை குன்றிமணியை வைத்து தான் திறப்பார்கள்.

பொதுவாக, நம் வீட்டு பெண்மணிகள் சொல்வது என்னவென்றால், வீட்டில் ஒரு குன்றிமணி தங்கம் கூட இல்லை. இதுவரை இந்த மனுசனுக்கு வாக்கப்பட்டு எனக்கு எதுவுமே செய்யவில்லை. ஒரு குன்றிமணி கூட இல்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும், குன்றிமணி ஒரு மூலிகை. ஒரு மரமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் வயல்வெளிகளின் ஓரம், புதர்க்காடுகளில் காணப்பட்ட குன்றிமணி மரங்கள், இன்று தொலைநோக்கி வைத்து தேடினாலும் கண்டுகொள்ள முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம், இந்த குன்றிமணி மரங்கள் வளர்வதற்கு அதிக காலம் பிடிப்பதும், குன்றிமணி விதைகள் கிடைக்காமல் போவதும் ஆகும்.

ஆனைக் குன்றிமணி, வெள்ளைக் குன்றிமணி என்று இரு வகைகளில் குன்றிமணிகள் காணப்பட்டாலும், ஆனைக் குன்றிமணி மரங்களின் பட்டைகள், இலைகள், விதைகள் ஆகியவை மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

குன்றிமணி மருத்துவ பயன்:

ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் நோய்களைப் போக்கும் மருந்துகளில் குன்றிமணி பயன்படுத்தப்படுகிறது. அஷ்ட

குன்றிமணி இலைகளின் பயன்கள்:

குன்றிமணி இலைகளை சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு காய்ச்சி, ஆற வைத்து பருகினால் உடல் வலி தீரும்.

சளி, இருமல் தொல்லைகள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் அல்சர் நோய் குணமாகும்.

குன்றிமணி வேர்களின் பயன்:

  1. உடலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், உடல் சூட்டால் வரும் கொப்புளங்கள் ஆகிய சரும வியாதிகளைப் போக்க குன்றிமணி வேர்களை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைத்து பருகினால், சரும பிரச்சனைகள் தீரும்.
  2. வெள்ளைக் குன்றிமணி விதைகள், அத்திப்பால், புளியங்கொட்டை தோல் ஆகியவற்றுடன் துளசி சாறு சேர்த்து நன்கு அரைத்து சிறிய சிறிய உருண்டையாக குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், வயிற்றுப் போக்கு சரியாகும்.
  3. கீரையாக கூட கடைந்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனைக் குன்றிமணியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து அதில் பூண்டு சேர்த்து கீரையாக கடைந்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் செரிமானக் கோளாறு நீங்கும்.

தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் குன்றிமணி:

  1. வெந்தயம், குன்றிமணி ஆகியவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, ஒரு வாரம் கழித்து தினமும் தலைக்கு தேய்த்து வர தலைமுடி உதிர்வது நின்று கருமையாக வளர ஆரம்பிக்கும்.
  2. வீட்டில் அழகு சாதனப் பொருட்களில் கூட குன்றிமணி மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. மேஜை, நாற்காலி போன்றவை செய்யவும் குன்றிமணி மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
  3. எனவே, இந்த மரத்தில் வீட்டு உபயோக அலமாரிகள், மேஜை நாற்காலி போன்றவை செய்யவும், இன்டீரியர் டெகரேசன் எனும் உள் அலங்கார வேலைப்பாடுகளில், சிலர், அறைகளின் அழகைக் கூட்ட, குன்றிமணி மரங்களைத் தரையில் பதிக்கிறார்கள்.