இதை மட்டும் நீங்கள் சாப்பிடாதீர்கள்!

139

இதை மட்டும் நீங்கள் சாப்பிடாதீர்கள்!

பொதுவாக நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான் ரொம்பவே முக்கியம். பழங்காலத்தில் கூழ், பழைய சோறு, களி, கஞ்சி, ரொட்டி இப்படி சத்தான உணவுகளை உட்கொண்டு நீண்ட ஆரோக்கியத்துடன் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பாஸ்ட் புட் உணவுகளைத் தேடி செல்கின்றனர். உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளை விரும்பி உட்கொள்கின்றனர்.

இதனால், பல பல பிரச்சனைகள் உருவாகின்றது. சிறு வயதிலேயே மரணம் கூட நிகழ்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆண்கள் தங்களின் வருங்கால சந்ததிகளுக்காக இந்த உணவுகளை மட்டும் உட்கொள்ளாதீர்கள். அது என்ன உணவு என்று பார்க்கலாம்…

கார்பனேட்டட் பானங்கள்:

இந்த பானங்களை குடிப்பதனால், விந்து அணுக்களின் உற்பத்தி குறைவதோடு அதன் செயல் திறனும் பாதிக்கப்படுகிறது.

சோயா உணவு வகைகள்:

சோயா பொருட்களை அதிகளவில் பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

பாலாடைக் கட்டி, கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்:

அதிகளவில் கொழுப்பு நிறைந்திருக்கும் பால் பொருட்கள் மற்றும் பாலாடைக் கட்டி ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வதால், விந்து அணுக்களின் எண்ண்ணிகை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பால் பொருட்களில் கால்சியம், வைட்டமின் டி ஆகியவை அடங்கியிருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்து அணுக்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளால் விந்து அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.