இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா இந்த கருப்பு உப்பு?

145

இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா இந்த கருப்பு உப்பு?

நம் உண்ணும் உணவில் சுவையை தரக்கூடியது உப்பு தான். உப்பு சுவையை மட்டுமல்ல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக் கூடியது. அந்த வகையில் கருப்பு உப்பை உணவில் சேர்த்தாலே சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. இப்படி ஏராளமான பயன்கள் இதோ.

சாதாரண சோடியம் உப்பை விட கருப்பு உப்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது.

உப்பு வகைகள்:

நம் இந்திய சமையல் தான் உலகெங்கிலும் பேர் போன சமையல். காரணம் இதில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. அந்தவகையில் சாப்பாட்டுக்கு மிகுந்த சுவை அளிக்கக் கூடிய ஒரு பொருள் உப்பு. உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள் அது போல உப்பை இல்லாத உடம்பும் குப்பை தான்.

காரணம் உப்புச் சத்தும் நம் உடம்பிற்கு அவசியம். போதுமான உப்புச் சத்து இருந்தால் நம் உடம்பில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் எல்லாம் சமநிலையில் இருக்கும். உப்பில் பல வகைகள் உண்டு தூள் உப்பு, கல் உப்பு, இந்துப்பு, கருப்பு உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதில் கல் உப்பும், தூள் உப்பும் சமையலில் அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் கருப்பு உப்பு பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் இந்த கருப்பு உப்பில் தான் ஏராளமான தாதுக்கள், விட்டமின்கள் அடங்கியுள்ளன. இந்த தம்மா துண்டு உப்பை சமையலில் சேர்க்கும் போது ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்கிறது ஆயுர்வேதம். நமது சீரண சக்தியிலிருந்து எடை இழப்பு வரை இந்த கருப்பு உப்பிற்கு அத்துப்படி. அதனால் தான் அதன் மருத்துவ நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்க போகிறோம்

சோடியம் குளோரைடு, சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், இரும்பு சல்பைட், சோடியம் சல்பேட், சோடியம் பைசல்பேட் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வடிவங்களில் காணப்படுகிறது.

கருப்பு உப்பின் வேறு பெயர்கள்:

கலா நமக் (இந்தி), சைந்தவ் மீத் (மராத்தி), இந்துப்பு (தமிழ்), கருத்தா உப்பு (மலையாளம்), நல்ல உப்பு (தெலுங்கு), பெரே (கன்னடம்), சஞ்சார் (குஜராத்தி), மற்றும் கலா லூன் (பஞ்சாபி) போன்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன.

கருப்பு உப்பு அல்லது இமயமலை கருப்பு உப்பு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இளஞ்சிவப்பு – சாம்பல் எரிமலை கல் உப்பு ஆனது இந்தியாவில் எளிதில் கிடைக்க கூடிய உப்பாகும் . இந்த கருப்பு உப்பின் சுவை மண் போன்று இருக்கும். சாலட், பாஸ்தாவை அழகுபடுத்த, இந்திய சமையல்களில் சுவையூட்ட இவைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு உப்பு ஊட்டச்சத்துக்கள்:

இந்த கருப்பு உப்பில் இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் இதர மினரல்கள் காணப்படுகின்றன. மேலும் இதிலுள்ள கந்தக தனிமத்தால் இது வேக வைத்த முட்டையை போன்ற சுவையை கொடுக்கக் கூடியது. பார்ப்பதற்கு கருப்பு நிற படிகங்களாக இருக்கும்.

சீரண பிரச்சனைகளை களைவதில் கருப்பு உப்பிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இதன் அல்கலைன் தன்மை வயிற்று பிரச்சினைகளை மலச்சிக்கல் மற்றும் வீக்கம் இல்லாமல் சுலபமாக களைந்து விடும். எதுக்களித்தல், வயிறு பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யும். இதில் சோடியம் குளோரைடு, சல்பேட், இரும்பு, மாங்கனீசு, ஃபெரிக் ஆக்சைடு ஆகியவைகள் உள்ளன. இந்த தனிமங்கள் வயிற்றில் வாயுத் தொல்லை வராமல் காக்கிறது.

நல்லா வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் 1/2 ஸ்பூன் கருப்பு உப்பு எடுத்து சாதாரண நீரில் கலந்து குடியுங்கள். அஜீரணக்கோளாறுகள் சரியாகி விடும்.

நம் உடம்பில் தசைகள் ஒவ்வொன்றும் இயங்க பொட்டாசியம் அவசியம். இந்த தசைகள் ஒழுங்காக இயங்காத போது பிடிப்பு உண்டாகிறது. கருப்பு உப்பு இப்படி உடம்பில் ஏற்படும் தசைப்பிடிப்பை நீக்க வல்லது. மேலும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் குடல் உறிஞ்சிக் கொள்ள இது உதவுகிறது.

எனவே தசைப்பிடிப்பு இருப்பவர்கள் தினமும் பயன்படுத்தும் உப்பிற்கு பதிலாக கருப்பு உப்பை பயன்படுத்தலாம். டயாபெட்டீஸ் நோயாளிகள் சாதாரண உப்பிற்கு பதிலாக கருப்பு உப்பை பயன்படுத்துங்கள். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு உதவி செய்கிறது.

ஒரு கிளாஸ் டம்ளரில் கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இது உடம்பில் உள்ள நச்சுக்களை எல்லாம் வெளியேற்றி இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க உதவுகிறது.

இது சோடியம் அளவை குறைத்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, இரத்தம் உறைவதை தடுக்க என எல்லாவற்றிற்கும் மருந்தாக செயல்படுகிறது.

கடல் உப்பு, பாறை உப்பு, பூண்டு உப்பு போன்றவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. எனவே இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்.

கால் வலி மூட்டு வலி என்றால் நம் பாட்டிமார்கள் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுப்பார்கள். மூலிகை இலைகளை பறித்து செய்வார்கள். அதே போன்று மூட்டு வலியை போக்க கருப்பு உப்பை லேசாக சூடாக்கி ஒரு துணியில் வைத்து கட்டி மூட்டு பிரச்சனை இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுங்கள். ரொம்பவும் சூடேற்றி வேண்டாம். அதே மாதிரி அழுத்தியும் ஒத்தடம் கொடுக்காமல் 10 – 15 நிமிடங்கள் லேசாக செய்யுங்கள்.

இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வரும் போது மூட்டுவலி பிரச்சனைகள் தீரும். கருப்பு உப்பில் உள்ள லிப்பி டுகள், என்சைம்கள் நமது எடையை குறைக்க உதவுகிறது. கருப்பு உப்பு குடல் இயக்கத்திற்கு துணை புரிகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்று வீக்கத்தை எதிர்த்து போரிடுகிறது. தடுக்கிறது.

கருப்பு உப்பை உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். அழற்சி, தும்மல், சலதோஷம், சுவாச பாதை பிரச்சினைகள், ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனைகள் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு இந்த கருப்பு உப்பு போதும்.

நீங்க மூக்கை உறிஞ்சும் இன்குலரில் சிறுதளவு கருப்பு உப்பு போட்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை என பயன்படுத்தி வாருங்கள். இவை உங்க சுவாச பாதை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

அதிக கொலஸ்ட்ரால் கொண்ட நபர்கள் டயட்டில் கருப்பு உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இது இரத்த அடர்த்தியை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

சிறிதளவு கருப்பு உப்பை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். கருப்பு உப்பு நம் குடலில் சுரக்கும் அமில தன்மையை சமநிலையில் வைக்கிறது. அமிலத்தன்மை அதிகமாகும் போது தான் நெஞ்செரிச்சல் ஏற்படும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவை குணமாகும்.

கருப்பு உப்பை உங்க சாலட் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். மனித உடலில் 1/4 பங்கு உப்பு எலும்புகளில் காணப்படுகிறது. எலும்பின் வலிமையை அதிகரிக்க கால்சியம் அவசியம். இதை கருப்பு உப்பில் பெறலாம். இது கீழ்வாத பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. இது தூக்கத்தால் ஏற்படுகின்ற வாதப் பிரச்சினைகளையும் போக்கக் கூடியது ஆற்றல் கொண்டது.