இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்!

551

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்!

ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அந்த வகையில் இன்று இந்தப் பதவில் இலந்தைப் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கப் போகிறோம். இது இனிப்பு கலந்த புளிப்பு சுவை கொண்டது. இலந்தைப் பழ மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாக பயன்படுகிறது.

காட்டு இலந்தை மற்றும் நாட்டு இலந்தை என்று இலந்தைப் பழத்தில் இரு வகைகள் உண்டு. இலந்தைப் பழத்தில் தாது உப்புகள், இரும்புச் சத்து, மாவுச் சத்து, ஏ, சி, பி3, பி6 ஆகிய விட்டமின்களும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம் ஆகிய தாது உப்புகளும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இலந்தைப் பழம் நினைவாற்றலை அதிகரிக்கக் கூடியது.

கால்சியம் சத்து குறைபாடு காரணமாக சிலருக்கு மூட்டு வலி, கழுத்து வலி ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. கால் தடுக்கி கீழே விழுந்தால் கூட எலும்பு உடையும் அபாயம் இவர்களுக்கு உண்டு. எலும்பு பிரச்சனை சரியாக இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மன அமைதி ஏற்படும். மேலும், ஆழ்ந்த தூக்கமும் வரும்.

இலந்தைப் பழம் சாப்பிட்டு வர பித்தம் சமநிலையில் இருக்கும். பசியின்மை பிரச்சனைக்கு இலந்தைப் பழம் சிறந்த மருத்துவ காரணியாக பயன்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இலந்தை பழம் சாப்பிட்டால் ரத்தப் போக்கு அதிகம் ஏற்படாது. மேலும், வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல் ஆகியவற்றை சரி செய்யும் சிறந்த மருந்தாகவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

ரத்தத்தை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. இலந்தைப் பழத்தில் உள்ள சபோனின், ஆல்காய்டுகள் ரத்தத்தில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இதன் மூலம் ரத்தம் சுத்தமாகிறது. செரிமான பிரச்சனையை சரிசெய்து பசியை தூண்டுகிறது. இரத்தக் காயம் ஏற்பட்டவர்களுக்கு இலத்தைப் பழத்தின் இலைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் காயம் குணமாகும்.

உஷ்ணம் காரணமாக ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.