உடம்பில் சக்தி வேணுமா, இதை சாப்பிடுங்கள்!

213

உடம்பில் சக்தி வேணுமா, இதை சாப்பிடுங்கள்!

நமது உடலில் நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமே கண்ட , கண்ட உணவுகளை சாப்பிடுவதனாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாகவும் தான். இன்றைய காலகட்டதில் குழந்தைகளுக்கு கூட சத்தான உணவுகளை யாரும் கொடுப்பதில்லை. நேரம் தவறி சாப்பிடுவதனாலும், சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததாலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் விளைவாக எளிதாகவே நமது உடலில் தொற்று ஏற்படுகிறது.

சரி, இதற்கு எல்லாம் என்ன தீர்வு? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? இதற்கு ஒரே ஒரு தீர்வு தான். எப்போதும் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும்.

வெள்ளைப் பூண்டு: பூண்டு சிறந்த மருத்துவ உணவு, அழகு சாதனப் பொருள், வாசனைப் பொருள். வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால், நன்மைகள் ஏராளம். முதலில், உடல் எடை குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் புண், தலைவலி, புற்றுநோய் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. மேலும், பாலியல் உறவிற்கு பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

கேரட்: கேரட்டில் அதிகளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. கேரட் வைட்டமின் ஏ சத்து நிறைந்த ஒன்று. கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. குடல் புண், பித்த கோளாறுகள், வயிற்றுப் போக்கு ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. மேலும், பாதி வேகவைத்த முட்டையுடன், தேன் மற்றும் கேரட் சாப்பிட்டு வந்தால், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

வெங்காயம்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயத்தில் அலிலின் என்ற ரசாயனப் பொருள் இருக்கிறது. இது பாக்டீரியாக்கள், நச்சு கிருமிகள் ஆகியவற்றை நமது உடலில் சேர விடாமல் தடுக்கிறது. உடல் வெப்பத்தையும் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

பருப்பு வகைகள்: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பச்சைப் பயறு, மைசூர் பருப்பு, சுண்டல், சிவப்பு காராமணி, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, தட்டை பயறு ஆகியவை சிறந்த மருந்துவ காரணிகளாக பயன்படுகின்றன. இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஆரஞ்சு:ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. காற்று மற்றும் நீர் மூலமாக பரவும் நோய் தொற்று கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.

மாதுளை: மாதுளம் பழத்திற்கு எந்த வகையான குடல் புண்களையும் ஆற்றும் தன்மை இருக்கிறது. அதோடு, ஆண்மை சக்தியையும் அதிகரிக்கிறது.