உடல் உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிமுறைகள்!

175

உடல் உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிமுறைகள்!

நமது உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு உடல் உறுப்புகளும் ஒரு காரணம். மூளை, ரத்த ஓட்டம், கண், காது, மூக்கு, தொண்டை, கை, கால் என்று ஒவ்வொரு உறுப்பும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டாலும் உடலில் பாதிப்பு ஏற்படும். சரி, இந்தப் பதிவில் உடல் உறுப்புகளை பலப்படுத்துவதற்கான எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்…

கண்கள்:

 1. பாலில் குங்குமப்பூ சேர்த்துக் கலந்து குடித்து வருவது நல்லது.
 2. நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கண் பிரச்சனைகள் வராவே வராது.
 3. தினந்தோறும் 5 பாதாம்பருப்புகள் சாப்பிட்டு வர வேண்டும்.
 4. வெண்டைக்காய் மசாலா, வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர்க்குழம்பு என்று சாப்பிட கண்களுக்கு நல்லது.
 5. அரைக்கீரையை வாரந்திற்கு இரு முறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.

நரம்புகள்:

 1. தினந்தோறும் 2 அத்திப்பழம் வீதம் சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
 2. மாதுளைப் பழச் சாறில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால், நரம்பு பிரச்சனை வராது.
 3. இலந்தைப் பழம் கிடைத்தால் அடிக்கடி சாப்பிடலாம்.
 4. கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
 5. சேப்பங்கிழங்கை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலப்படும்.

இரத்தம்:

 1. வாரத்திற்கு 2 நாட்கள் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொண்டால் ரத்த உற்பத்தி அதிகமாகும்.
 2. ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதற்கு விளாம்பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
 3. தினந்தோறும் ஒரு கப் அளவிற்கு தயிர் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
 4. ஒரு ஸ்பூன் இஞ்சி சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிப்பாகும்.
 5. 2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில், சீரகம் போட்டு 10 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வர இரத்தம் சுத்தமாகும்.