உடல் எடையை குறைக்க உதவும் கோழி சூப்!

84

உடல் எடையை குறைக்க உதவும் கோழி சூப்!

வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையில் நேரம் தவறி சாப்பிடுதல், கண்ட கண்ட இடங்களில் சாப்பிடுதல், எளிதில் ஜீரணமாகாத உணவுகளை விரும்பி சாப்பிடுதல், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தல் என்று பல காரணங்களால் உடல் எடை கூடுகிறது.

உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுதல், சத்தான காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல் என்று பல வழிகளில் உடை எடையை வெகுவாக குறைக்கலாம். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன.  அது என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

உடல் எடையை குறைப்பதில் முட்டைக்கோஸ் சூப் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூப் செய்வதும் மிகவும் எளிது. வைட்டமின்கள் கே, சி மற்றும் பி 6, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்துக்கள் ஆகியவை ஏராளமாக இதில் உள்ளன. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பருப்பு மற்றும் பூசணி சூப் ஆகியவை உடல் எடை குறைப்புக்கு பயன்படுகிறது. இவரை இரண்டையும் கலந்து குடிக்கும் போது உடல் எடை வெகுவாக குறையும். இதில் ஏராளமான புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

சிக்கன் சூப் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு முதலில் சிக்கனை நன்றாக வேக வைத்து, அதன் பிறகு குக்கரில் போட்டு வெங்காயம், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிதளவு தனியா தூள், மிளகு தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு சிக்கன் சூப்பில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி பிழிந்து விட வேண்டும்.

பன்னீர் மற்றும் கீரை சூப் உடை எடையை குறைக்க பயன்படுகிறது. கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகமாகவே உள்ளன. இது சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இதில், இரும்புச்சத்து, கால்சியம், புரதம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால், இந்த சூப் உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.

உடல் எடை குறைப்பதில் பட்டாணி மற்றும் கேரட் சூப் முக்கிய பங்காற்றுகிறது. கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நன்மையளிக்கும். அதோடு, பட்டாணியில் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு ஆகியவை அதிகளவில் உள்ளன. அவை ஆரோக்கியம், இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நன்மை அளிக்கிறது.