உடல் எடையை குறைக்க உதவும் வாழைத்தண்டு!

223

உடல் எடையை குறைக்க உதவும் வாழைத்தண்டு!

உடல் உறுப்புகளை சீர் செய்து திறம்பட செயல்படுத்த வாழைத்தண்டு மிகவும் பயன்படுகிறது. வாழை ஒரு வகை பழ மரம். வாழையின் பழம், இலை, காய், தண்டு என்று அனைத்தும் பயனுள்ளவை. வாழைப்பழமானது உணவிலும், இறை வழிபாட்டிலும் பயன்படுகிறது. வாழைத்தண்டில் டையூரிட்டிக் எனப்படும் சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் பண்புகள் நிறைந்துள்ளன. வாழைத்தண்டு சாற்றை குடித்து வந்தால் சிறுநீர் உற்பத்தி அதிகரித்து சிறுநீர்க் குழாயில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறும்.

வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் வாழைத்தண்டு சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது.

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது. அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டு சாற்றை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அமில தன்மையை சமன் செய்து விரைவாக நெஞ்சரிச்சலை சரி செய்யப்படுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து உடலின் செல்களில் இருக்கிற கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. வாழைத்தண்டு சாறு குடித்தால் வயிறு நிரம்பியது போன்று தோன்றும். இதனால், நம் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து உடல் எடையை குறைக்கலாம்.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை வாழைத்தண்டு கட்டுப்படுத்துகிறது. வாழைத்தண்டில் இரும்பு மற்றும் வைட்டமின் பி 6 சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரும்பு மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படக் கூடிய ரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு, பெண்களுக்கு தேவையான உடல் பலமும் கிடைக்கிறது. மேலும் வாழைத்தண்டானது வயிற்றிலுள்ள புண்களையும் குணமாக்க உதவுகின்றது.