உடல் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டு மருந்து சிகிச்சை!

185

உடல் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டு மருந்து சிகிச்சை!

ஒவ்வொரும் நமது உடலை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. அதற்கேற்ப நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு அதனை குணப்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்…

தலைவலி:

ஐந்து அல்லது ஆறு துளசி இலை, சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி சரியாகும்.

வயிற்று வலி:

வெந்தயத்தை நெய்யில் கொண்டு வறுத்து அதனை பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி குணமாகும்.

மூக்கடைப்பு:

பொதுவாக குளிர் காலங்களில் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது போன்று மூக்கடைப்பு வரும். அப்போது, ஒரு துண்டு சுக்கு எடுத்து அதனை தோல் இல்லாமல் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.

பூச்சிக்கடி வலி:

எறும்பு உள்பட பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்த்தால் வலி இல்லாமல் போகும்.

உடல் எடை குறைய:

குண்டாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையை குறைக்க கொள்ளுப் பயறு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

வயிற்றுப்புண்:

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் சரியாகும்.

சுகப்பிரசவத்திற்கு:

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டு வந்தால் குழந்தை சுகமாகவும், அழகாகவும் பிறக்கும்.

தாய்ப்பால் சுரக்க:

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகளவில் சுரக்கும்.

நெற்றிப்புண்:

சில பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ நெற்றியில் குங்குமம் வைத்து குங்குமம் வைத்து அந்த இடம் முழுவதும் புண்ணாகியிருக்கும். அதற்கு, வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனம் சேர்த்து இழைத்து தடவி வந்தால் நெற்றுப்புண் சரியாகும்.

கை சுளுக்கு:

கை சுளுக்கு ஏற்பட்டால் நீரில் மிளகுத் தூள், கற்பூரம் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது அப்படியே ஒத்தடம் கொடுத்தால் சுளுக்கு சரியாகும்.

டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு சரியாகும்.

ஞாபக சக்தி:

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.