உறுப்புகளை வலிமையாக்க எளிய வழிமுறைகள்!

294

உறுப்புகளை வலிமையாக்க எளிய வழிமுறைகள்!

நமது உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு உடல் உறுப்புகளும் ஒரு காரணம். மூளை, ரத்த ஓட்டம், கண், காது, மூக்கு, தொண்டை, கை, கால் என்று ஒவ்வொரு உறுப்பும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டாலும் உடலில் பாதிப்பு ஏற்படும். சரி, இந்தப் பதிவில் உடல் உறுப்புகளை பலப்படுத்துவதற்கான எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்…

பல்:

  1. மா இலையை பொடியாக்கி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும். பல் சொத்தையும் வராது.
  2. இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பு தினமும் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர பல் சொத்தை நீங்கும். பல்லில் ரத்தக்கசிவும் வராது.
  3. ஆப்பிள், கரும்பு, கேரட் ஆகியவற்றை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
  4. கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் பல் தொடர்பான எந்த பிரச்சனையும் வராது.

வயிறு:

  1. தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரை குடித்தால் வயிறு சுத்தமாகும்.
  2. வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு டம்ளர் தேங்காய் பாலுடன் கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான எந்த பிரச்சனையும் வராது.
  3. தொப்பை குறைய சுரைக்காயை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  4. கொள்ளு ரசம் சாப்பிட கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

பாதம்:

  1. இரண்டு கால் விரல்களையும் நீட்டி, மடக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்.
  2. வேப்பெண்ணெயை சூடாக்கி கால் விரல்களுக்கு இடையில் தேய்த்தால் சேற்றுப் புண் சரியாகும்.