உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்!

286

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்!

ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது அவசியம். சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.

சரி, இன்றைய பதிவில் நாம் உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கப் போகிறோம்…

 1. உலர் திராட்சையில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
 2. வெறும், 100 கிராம் உலர் திராட்சையில் கிட்டத்தட்ட 299 கலோரிகள் உள்ளன.
 3. முடிவு உதிர்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு உலர் திராட்சை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 4. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை நீக்குவதற்கு உலர் திராட்சையை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 5. உலர் திராட்சையை எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும்.
 6. பார்வைக்குறைபாடு பிரச்சனைக்கு உலர் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
 7. உலர் திராட்சையில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது. இது இதய துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.
 8. கொழுப்பைக் குறைக்க, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை முக்கியமாக பயன்படுகிறது.
 9. மஞ்சள் காமாலை நோய்க்கு உலர் திராட்சை பயன்படுகிறது. தினமும் இருமுறை உலர் திராட்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 10. ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் உலர் திராட்சை எடுத்துக் கொண்டால், கட்டில் உறவில் கில்லாடியாகலாம்.
 11. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களும் உலர் திராட்சை எடுத்துக் கொள்ளலாம்.
 12. தாய்மார்கள் உலர் திராட்சை உண்டு வர சத்தான பால் சுரக்கும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.