ஊற வைத்த முந்திரி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

85

ஊற வைத்த முந்திரி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

விரும்பி உண்ணப்படும் ஒரு வகையான உணவு வகையைச் சேர்ந்தது.  கறி சமைக்கவும், ருசி சேர்ப்பதற்கும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்று முந்திரி. இதனை அப்படியே சாப்பிடலாம். வறுத்தும் சாப்பிடலாம், ஊறவைத்து அதன் பிறகும் சாப்பிடலாம். ஊற வைத்த முந்திரி எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டுள்ளது.

முந்திரியில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது. முந்திரியில் ஃபைடிக் அமிலம் காணப்படுகிறது. இது அனைவருக்கும் ஜீரணிக்க எளிதான ஒன்றாகும். முந்திரியை ஊற வைத்து அதன் பிறகு சாப்பிடும் போது அதிலிருந்து ஃபைடிக் அமிலம் வெளியேறி அது எளிதில் ஜீரணமாகும்.

முந்திரியிலுள்ள ஃபைடிக் அமிலம் உடலிலுள்ள தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. பொதுவாக அனைவரது உடலிலும் சில தாதுக்களின் குறைபாடு இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் முந்திரியை ஊற வைத்து சாப்பிடலாம்.

முந்திரி பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஊற வைத்த முந்திரியில் கலோரிகள், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து பசியைக் குறைக்கும். அதே நேரத்தில் வளர்சிதை மாற்றத்தை சரி செய்கிறது. மேலும், எடை இழப்புக்கும் இது உதவுகிறது. இது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் முந்திரி பெரிதும் உதவுகிறது. ஊற வைத்த முந்திரியை சாப்பிடும் போது கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

முந்திரியில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.