என்னென்ன மூலிகைகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

552

என்னென்ன மூலிகைகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

நம் நாட்டில் எத்தனையோ மூலிகை தாவரங்கள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் நாம் பெரிதாக பயன்படுத்திக் கொள்வதில்லை. நமது முன்னோர்கள் அதனை நன்றாகவே பயன்படுத்தி நீண்ட நாட்கள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் எளிதில் ஜீரணமாகாத உணவுகளைத்தான் நாம் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம். சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ், கிரில் சிக்கன், நூடுல்ஸ், புரோட்டா ஆகியவற்றை நாம் விரும்பி சாப்பிடுவதோடு, நமது குழந்தைகளுக்கும் அதைத்தான் கொடுக்கிறோம். இதன் மூலமாக உடல் நல பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சரி, இதெல்லாம் இருக்கட்டும், மூலிகைகள் குறித்தும், அதற்கான பலன்கள் குறித்தும் இந்தப் பதிவில் நாம் காண்போம்…

நெல்லிக்காய் பொடி: பற்களின் எலும்புகள் பலப்படும்.

வில்வம் பொடி: இரத்த கொதிப்பிற்கு சிறந்த மருந்தாக பயன்படுவதோடு, அதிகமான கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

அருகம்புல் பொடி: உடல் எடையை குறைத்து கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்யவும் செய்கிறது.

வல்லாரை பொடி: ஞாபகசக்திக்கும், நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கும் வல்லாரை பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தூதுவளை பொடி: நாள்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமல் ஆகியவற்றிற்கு தூதுவளை பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கடுக்காய் பொடி: குடல் புண் ஆறும்.

ஆவாரம் பூ பொடி: இதயம் பலப்படும். உடல் பொன்னிறம் ஆகும்.

கண்டங்கத்திரி பொடி: சளி, இரைப்பு நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

துளசி பொடி: மூக்கடைப்பு, சுவாச கோளாறுக்கு துளசி பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ரோஜாப்பூ பொடி: இரத்த கொதிப்புக்கு சிறந்தது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

ஓரிதழ் தாமரை பொடி: ஆண்மைக் குறைபாட்டை குணப்படுத்துகிறது. வெள்ளைப் படுதல் நீங்கும். இது ஒரு வயாகரா.

வெந்தயப் பொடி: வாய்ப்புண் மற்றும் வயிற்றிலுள்ள புண் ஆகியவற்றை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ஜாதிக்காய் பொடி: நரம்புத் தளர்ச்சி நீங்கவும், ஆண்மை சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

இந்தப் பதிவின் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் காண்போம்……பதிவு 2