எலுமிச்சையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது தெரியுமா?

507

எலுமிச்சையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது தெரியுமா?

ஓசுபேக் என்ற தாவரவியல் பெயர் கொண்டது எலுமிச்சை பழம். எலுமிச்சையை அரச கனி என்றும் அழைப்பார்கள். கடவுள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. செம்மண் பகுதிகளில் அதிகம் வளரும் தன்மை கொண்டது. இதன் மரம் சுமார் 15 அடி வரையில் வளரும். எலுமிச்சையில் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை, மலை எலுமிச்சை, காட்டு எலுமிச்சை என பல வகைகள் உண்டு. இதில், காட்டு எலுமிச்சை அதிக மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. ஏனென்றால், மற்ற எலுமிச்சைகளை விட காட்டு எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ளது.

மேலும், கலோரி, புரத சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மினரல்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன.

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்:

ஒரு கப் டீயில் எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி, அதனை அந்த டீயில் சாறு பிழிந்து அதனை குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

கோடை காலங்களில் ஏற்படும் நாவறட்சியை தடுக்க எலுமிச்சை பழம் சிறந்த மருத்துவ காரணியாக பயன்படுகிறது. எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மேலும், அந்த எலுமிச்சை தோலை தலைக்கு தேய்த்து குளித்து வர உடல் சூடும் தணியும்.

கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சனை சரியாகும்.

எலுமிச்சை பழ சாற்றில் ஒரு ஸ்பூன் சீரகம், மிளகு கலந்து வெயிலில் காய வைத்து, காய்ந்த பின் நன்றாக பொடி செய்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலையும், மாலையும் அந்த பொடியில் அரை தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் கலந்து குடித்து வந்தால் பித்தம் சரியாகும்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்து வரலாம். இது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவை குணமாகும்.

எலுமிச்சை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, அதன் பிறகு உலர்த்தி அதனை சூரணம் செய்து 5 கிராம் அளவு எடுத்து வர 48 நாட்களில் பைத்தியம் குணமாகும். மயக்கம், பிதற்றல் ஆகியவையும் தீரும்.

வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்கள் ஆரோக்கியமாகவும் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம். எலுமிச்சையில் அதிகளவில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மனிதர்களின் உடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும். பல் வலி மற்றும் ஈறுகளில் சொத்தை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சூடான தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து காலை மற்றும் மாலை என்று இரு வேளையிலும் வாய் கொப்பளித்து வந்தால் பற்கள், ஈறுகள் தொடர்பான குறைபாடுகள் நீங்கும்.