எலும்புக்கு பலம் கொடுக்கும் நெய்!

176

எலும்புக்கு பலம் கொடுக்கும் நெய்!

நமது உடலில் நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமே கண்ட, கண்ட உணவுகளை சாப்பிடுவதனாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாகவும் தான். இன்றைய காலகட்டதில் குழந்தைகளுக்கு கூட சத்தான உணவுகளை யாரும் கொடுப்பதில்லை. நேரம் தவறி சாப்பிடுவதனாலும், சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததாலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் விளைவாக எளிதாகவே நோய் தொற்று ஏற்படுகிறது.

நாம் இதெல்லாம் எதற்கு என்று எளிதில் விட்டு விடக்கூடிய உணவில் தான் சத்து அதிகம் இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் நாம் எடுத்துக் கொள்வதில்லை. வாரம் முழுவதும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே இதனை எடுத்துக் கொண்டால் போதும். அப்படி எதனை நீங்கள் இப்படி சொல்றீங்க? என்று கேட்கிறீர்களா? ஆம், நெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

  1. நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E உள்ளது. இது கண்களை பாதுகாப்பதுடன் உடலில் ரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது.
  2. அஜீரணக் கோளாறை தடுக்கிறது.
  3. கொழுப்பு தன்மை குறைவு என்பதால் சமையல் செய்வதற்கும் நெய் பயன்படுத்தலாம்.
  4. எலும்பு வலுப் பெறுவதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதிலும் நெய் முக்கிய பங்காற்றுகிறது.
  5. ஒரேயொரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்கவே இருக்காது. உடல் எடை குறைக்கவும் நெய் உதவுகிறது.